AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன்னாசி பழத்தை உருட்டிவிட்ட முதல்வர் விஜய்.. பின்னால் இருக்கும் முக்கிய காரணம்.. என்ன அது!

Reason Why CM Vijay Rolled Pineapple : சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் ஆகியோர் அன்னாசி பழங்களை உருட்டி விட்டினர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

அன்னாசி பழத்தை உருட்டிவிட்ட முதல்வர் விஜய்.. பின்னால் இருக்கும் முக்கிய காரணம்.. என்ன அது!
அன்னாசி பழம் உருட்டிய முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Oct 2026 17:07 PM IST

சென்னை மாவட்டம், அம்பத்தூர் பகுதியில் சிங்கப்பூரை சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனமானது 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை அமைத்துள்ளது. இந்த தரவு மையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூரின் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின்போது, சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் அன்னாசி பழங்களை தரையில் உருட்டி விட்டார். இதேபோல, தமிழக முதல்வர் விஜய்யும் அன்னாசி பழத்தை தரையில் உருட்டி விட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் என்ன காரணம் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. தற்போது, தமிழக முதல்வர் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் அன்னாசி பழங்களை உருட்டி விட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது,

அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருக

இதில், சிங்கப்பூர் நிறுவனத்தின் தொடக்க விழாக்கள் மற்றும் புதிய அலுவலக திறப்பு விழாக்கள் நடைபெறும்போது அன்னாசி பழத்தை கொடுத்து முக்கிய விருந்தினர்களை உருட்டி விட சொல்வது பாரம்பரிய கலாசாரமாக இருந்து வருகிறதாம். அன்னாசி பழத்தை ஹோக்கியன் மொழியில் ஓங் லாய் என அழைக்கப்படுவது உண்டு. இந்த ஓங் லாய் என்ற பெயர் அதிஷ்டம் மற்றும் செல்வத்தை பெருக்கும் என கருதப்படுகிறது. அத்துடன் அன்னாசி பழமானது மங்களகரமானதாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: மன்றம் டூ இயக்கம்.. புது கொடி.. தனி ட்ராக்கை கையில் எடுக்கும் தனுஷ்!

புதிய செயல் தொடங்கும் இடத்தில் அன்னாசி பழம்

இது மட்டும் இன்றி சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் புதிதாக கட்டப்பட்ட வீடு, புதிய அலுவலகம் மற்றும் புதிய நிறுவனத்தை தொடங்கும் போது வாசலில் இருந்து உள் நோக்கி அன்னாசி பழத்தை உருட்டி விடுவது வழக்கமாகும். இதன் மூலம் புதிதாக தொடங்கப்படும் செயல் எதுவாக இருந்தாலும் அது சிறப்பாகவும், லாபம் மிகுந்ததாகவும் இருக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

அம்பத்தூர் பிரம்மாண்ட தரவு மையம்

அதன் அடிப்படையிலேயே, அம்பத்தூரில் தொடங்கப்பட்ட 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையம் சிறப்பாக செயல்படுவதற்காக சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யாங் மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோர் ஒன்றாக இணைந்து அன்னாசி பழங்களை உருட்டி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தரவு மையம் சுமார் 4,900 சர்வ ரேக்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரூ.5,000 கோடியில் தரவு மையம்! நிகழ்ச்சியின் போது அண்ணாசிப் பழத்தை உருட்டிய முதல்வர் விஜய்..

Follow Us