AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மன்றம் டூ இயக்கம்.. புது கொடி.. தனி ட்ராக்கை கையில் எடுக்கும் தனுஷ்!

Dhanush Fans Club Transformed into Welfare Association: நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய லோகோ மற்றும் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் வருகை குறித்துத் தொடர் கதைகள் வெளியாகும் சூழலில், இந்த மாற்றம் திரை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மன்றம் டூ இயக்கம்.. புது கொடி.. தனி ட்ராக்கை கையில் எடுக்கும் தனுஷ்!
நடிகர் தனுஷ்
Sekaran S
Sekaran S | Published: 15 Oct 2026 14:34 PM IST

கோவை, அக்.15: தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக உலா வரும் தனுஷ், தனது இயக்கம் மற்றும் நடிப்பு மூலமாக சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். திரையுலகில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று வரும் வேளையில், அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் தற்போது மிக முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றி, பின்னர் அரசியல் களம் காண்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், நடிகர் தனுஷின் ரசிகர் மன்றமும் தற்போது அதிகாரப்பூர்வமாக நற்பணி இயக்கமாக உருமாறியுள்ளது. கோவையில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, புதிய அடையாளங்களுடன் இயக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி.. தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்..

கோவை கூட்டமும் புதிய அறிவிப்புகளும்:

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தனுஷ் ரசிகர் மன்றத்தை முறைப்படியான நற்பணி இயக்கமாக மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இயக்கத்திற்கான பிரத்யேக புதிய லோகோ மற்றும் கொடியும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. கூட்டத்திற்கு அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் சுப்ரமணியம் சிவா மற்றும் செயலாளர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், சிறப்பு அழைப்பாளராக அரசியல் விமர்சகர் ரபி பெர்னாண்டஸ் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தின் பாதுகாப்பைக் கருதியும், தகவல்கள் கசியாமல் இருக்கவும் பங்கேற்ற ரசிகர்கள் தங்களது அலைபேசிகளை மண்டபத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்:

சமூக நற்பணிகள் குறித்த ஆலோசனைகள் மட்டுமின்றி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, பிரபல சின்னத்திரை மற்றும் மேடைப் பேச்சாளர்களான ஈரோடு மகேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தலைமையில் சிறப்பான பட்டிமன்றம் ஒன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த திரளான ரசிகர்கள் இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ்.. தொகுதிகள் வாரியாக கட்டமைப்பு.. நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம்!!

அரசியல் வருகைக்கான அடித்தளமா?

ஏற்கனவே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் பலர் அரசியலில் களமிறங்கி வரும் சூழலில், தனுஷும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்ற ஊகங்களும் செய்திகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து உலா வருகின்றன. இந்த நிலையில், ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக உயர்த்தப்பட்டு, கொடி மற்றும் லோகோ அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த மாற்றம் முழுக்க முழுக்க சமூக நலப் பணிகளை வேகப்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளதா அல்லது எதிர்கால அரசியல் பயணத்திற்கான முதற்கட்ட அடித்தளமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், தனது அரசியல் வருகை குறித்து நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால், அவரது அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Follow Us