AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ்.. தொகுதிகள் வாரியாக கட்டமைப்பு.. நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம்!!

Dhanush Political Entry: நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசியலில் நடிகர்களின் வருகை அதிகரித்து வரும் சூழலில், நடிகர் விஜயின் அரசியல் பாணியைப் பின்பற்றி தனுஷும் தனது மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ்.. தொகுதிகள் வாரியாக கட்டமைப்பு.. நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம்!!
நடிகர் தனுஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Oct 2026 07:48 AM IST

கோவை, அக்.15: தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் தனுஷ், தனது சினிமா பயணத்தைத் தாண்டி அரசியல் தளத்தில் காலடி வைப்பதற்கான அமைப்பு ரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் சமீப காலமாகத் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நேரடி அரசியலில் களமிறங்கி வரும் சூழலில், நடிகர் தனுஷும் அந்தப் பாதையை நோக்கி நகர்ந்து வருவதை உறுதி செய்யும் வகையில் முக்கிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் என்பதை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டுகால ரசிகர் மன்றச் சேவைகளை ஒருங்கிணைத்து, மக்களுக்கு நேரடி நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரு பலமான அமைப்பாக அதனை மாற்றும் முயற்சிகள் தற்போது முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..

கோவையில் ரகசிய மாநில நிர்வாகிகள் கூட்டம்:

இந்த அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, கோவை சக்தி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தனுஷின் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் ரகசியப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நிர்வாகிகள் யாரும் தங்களுடைய செல்போன்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில்தான் ரசிகர் மன்றத்தை முழுமையான நற்பணி இயக்கமாக மாற்றுவது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாரியாக நற்பணி இயக்கங்களைக் கட்டமைக்கும் பணிகளைத் தனுஷ் தரப்பு தீவிரப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கட்சிக்கான அடிமட்டக் கட்டமைப்பைத் தனுஷ் தற்போதே பலப்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

புதிய கொடியை அறிமுகப்படுத்திய தனுஷ்:

இந்த மாற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில், தனுஷ் நற்பணி இயக்கத்திற்கான புதிய கொடியும் பிரத்யேக லோகோவும் கோவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளியாகியுள்ள புதிய லோகோவின் வடிவமைப்பில், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான வட்ட வடிவ எல்லையின் நடுவில் கம்பீரமான பெரிய சிவப்பு நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது. அந்தச் சிவப்பு நட்சத்திரத்திற்குள் நடிகர் தனுஷ் கைகூப்பி வணக்கம் செலுத்துவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளதுடன், அது நற்பணி இயக்கம் என்பதைக் குறிக்கும் தமிழ்ச் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கொடி மற்றும் லோகோ அறிமுகமானது தனுஷின் அடுத்தகட்ட அரசியல் பிரவேசத்திற்கான அதிகாரப்பூர்வ அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: “நான் பேசுவது போர் அடிக்கிறதா?”.. மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர் பாபு – தவெக எம்எல்ஏ விஜயதாமு.. ஆய்வுக்கூட்டத்தில் பரபரப்பு!!

விஜயின் அரசியல் பாணியைப் பின்பற்றும் வியூகம்:

ஏற்கனவே தமிழக அரசியலில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தைக் கட்சியாக மாற்றிய அரசியல் உத்தியைப் பின்பற்றியே, தனுஷும் தற்பொழுது தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றித் தொகுதி வாரியாகக் கட்டமைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். நற்பணி இயக்கத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதைத் துரிதப்படுத்துமாறும், தேர்தல் ஆணையத்தை அணுகி இயக்கத்தைப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ முன்னெடுப்புகளில் இறங்குமாறும் தனுஷ் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா ரசிகர்களை அரசியல் பலமாக மாற்றும் இந்த புதிய வியூகம், கோலிவுட் வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us