AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..

Edappadi Palaniswami: அதிமுகவில் இருந்து கிளைச் செயலாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்ததற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கனவு வேண்டுமானால் காணலாம்; ஆனால், அது ஒருபோதும் நடைபெறாது” என்றார். அடிப்படைக் கட்டமைப்புகூட இல்லாத கட்சியாகத் தவெக இருப்பதாகக் கூறிய அவர், அடுத்த கட்சியினரைத் தொடர்ந்து அழைத்து கட்சியை வளர்க்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Oct 2026 16:18 PM IST

அக்டோபர் 14, 2026: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றும், அடுத்த கட்சிக்காரர்களைக் கூவி கூவி அழைக்கும் நிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சென்றுவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து மேலும் பலர் ராஜினாமா செய்வார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சூசகமாகத் தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்தார்.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்? – அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

மின்சார வாரியம் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.35-க்கு கொள்முதல் செய்வதாகப் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அந்தக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி, 2026ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தவெக அரசு முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மட்டும் இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

ஏற்கெனவே தமிழகத்திற்கு ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பினார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை!

தமிழகத்தில் அரிசி ஒரு கிலோ ரூ.100-ஐத் தாண்டி விற்பனை செய்யப்படுவதாகவும், புளியின் விலையும் ரூ.100-ஐத் தாண்டியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: ஆயுத பூஜை விடுமுறை: 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முன்பதிவு எப்போது?

கல்லாப்பெட்டி கூட்டணியில் தான் முதலமைச்சராக இருக்கிறார் விஜய்:

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியை விமர்சித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய்க்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதே கட்சிகளின் ஆதரவுடன் தான் விஜய் ஆட்சி அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் ஒன்றைப் பேசிவிட்டு, ஆட்சி அமைப்பதற்காக வேறு நிலைப்பாட்டை எடுப்பவர் விஜய் என்றும் அவர் விமர்சித்தார்.

“10 ஆயிரம் வாக்குகள் தான் வித்தியாசம்!” – மக்கள் செல்வாக்கை இழக்கும் தவெக

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றும், சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிக வாக்குகளைப் பெற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க: மழைக்கு ரெடியா மக்களே! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்?

இரண்டு தொகுதிகளிலும் விஜய் டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவது, முருங்கைக்காய் பறிப்பது, ஆடு மேய்ப்பது எனப் பல்வேறு வகைகளில் பிரசாரம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், சினிமா கவர்ச்சியால் மட்டுமே தவெக வெற்றி பெற்றுள்ளதாக விமர்சித்தார்.

மற்ற கட்சி உறுப்பினர்களை வைத்து கட்சியை வளர்க்க முயற்சிப்பது கேவலமாக இல்லையா?

அதிமுகவில் இருந்து கிளைச் செயலாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்ததற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கனவு வேண்டுமானால் காணலாம்; ஆனால், அது ஒருபோதும் நடைபெறாது” என்றார்.

அடிப்படைக் கட்டமைப்புகூட இல்லாத கட்சியாகத் தவெக இருப்பதாகக் கூறிய அவர், அடுத்த கட்சியினரைத் தொடர்ந்து அழைத்து கட்சியை வளர்க்க முயற்சிப்பதாக விமர்சித்தார். முதலில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடத்த முயன்றதாகவும், தற்போது கிளைச் செயலாளர்கள் வரை இறங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகூட செலுத்தாதவர் முதலமைச்சர் விஜய் என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்சியினரை அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தை வளர்க்க முயற்சிப்பது கேவலமாக இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

Follow Us