“நான் பேசுவது போர் அடிக்கிறதா?”.. மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர் பாபு – தவெக எம்எல்ஏ விஜயதாமு.. ஆய்வுக்கூட்டத்தில் பரபரப்பு!!
Chennai Monsoon Review Meeting: சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை ஆய்வுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ சேகர் பாபுவுக்கும், தவெக எம்எல்ஏ விஜயதாமுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் தனது பேச்சு போர் அடிப்பதாக விஜயதாமு கூறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து சேகர் பாபு ஆவேசமாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அக்.15: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் ஆய்வுக் கூட்டங்கள் அரசு தரப்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை குறித்த மிக முக்கியமான ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, திமுக எம்எல்ஏ சேகர் பாபு பேசிக் கொண்டிருந்த வேளையில், தவெக எம்எல்ஏ விஜயதாமுவுக்கும் அவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது. சேகர் பாபு பேசுவதைக் கேட்பது தனக்குப் ‘போர்’ அடிப்பதாக விஜயதாமு தெரிவித்ததாக கூறியதை தொடர்ந்து, சேகர் பாபு கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியது பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..
கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்:
சென்னை நகரில் வரவிருக்கும் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்துக் கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக, பருவமழையின் போது வெப்பத்தாக்கமும் காற்றழுத்தமும் அதிகமாக இருக்கும் என்றும், அதனைச் சமாளிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த தவெக எம்எல்ஏ விஜயதாமுவுக்கும் சேகர் பாபுவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. சேகர் பாபு ஆற்றிய நீண்ட உரை தனக்குப் சோர்வையும் போர் அடிக்கும் தன்மையையும் தருவதாக விஜயதாமு குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த சேகர் பாபு, தான் ஆற்றிய உரை எவ்வித வீண் பேச்சும் அல்லாமல் முழுக்க முழுக்க மக்களின் பாதுகாப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே என்பதைத் தெளிவுபடுத்தினார்.
சேகர் பாபுவின் ஆவேசப் பேச்சு:
சட்டமன்றத்தில் பலமுறை மக்கள் சேவையாற்றியுள்ளதையும், பல தேர்தல்களைச் சந்தித்துத் தற்போதைய நிலைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட சேகர் பாபு, மக்கள் நலன் சார்ந்து பேசும் போது அதைக் குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று சாடினார். “நான் பேசுவது போர் அடிக்கிறது என்றால், பின் எதற்காக என்னை இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு அழைத்தீர்கள்?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். சாதாரண உள்ளாட்சித் தேர்தல் காலம் தொட்டு மக்கள் பிரச்சினைகளுக்காகக் களத்தில் நின்று பணியாற்றி வரும் தனது அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், மழைக்காலப் பேரிடர்களைச் சமாளிப்பது குறித்த ஆலோசனைகள் எவ்வித அரசியல் நோக்கமும் இன்றி முழுக்க முழுக்கப் பொதுமக்களின் நலனைக் கருதி மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். கூட்டத்தில் இருவரும் வெளிப்படையாக விவாதித்துக் கொண்டது அங்கு உடனிருந்த அதிகாரிகளுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் சவாலான சூழலை உருவாக்கியது.
மேலும் படிக்க: ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!
சமாதானம் செய்த அமைச்சர் ஆதவ்:
தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சேகர்பாபுவை சமாதானப்படுத்தி, தனது உரையை தொடருமாறு வலியுறுத்தினார். பருவமழை காலங்களில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான ஆய்வுக் கூட்டத்தில், திமுக எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சி எம்எல்ஏவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசப்பப்பொருளாக மாறியுள்ளது. இயற்கை இடர்பாடுகளைச் சமாளிக்க அனைத்துக் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட வேண்டிய இத்தகைய காலகட்டத்தில், கூட்டத்தில் அரங்கேறிய இந்தச் சலசலப்பு அரசு அதிகாரிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.