ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!
Railway Latest Announcement : ரயிலில் சத்தமாக பாடல் கேட்டாலோ, சத்தமாக வீடியோ பார்த்தாலை அல்லது வீடியோ கேம் விளையாடினாலோ 6 மாதம் சிறை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று ரயில்வே நிரிவாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது, விளையாட்டுகளில் ஈடுபடுபவர் மீது அபராதம் விதித்தும், ரயிலில் இருந்து இறக்கிவிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, சாதாரண ரயில்களில் பயணம் செய்யும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களில் சத்தமாக பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்பிரிவின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்
இந்த அபராத தொகையை டிக்கெட் பரிசோதகர் அல்லது உயர் அதிகாரம் கொண்ட வணிகப்பிரிவு அதிகாரிகள் வசூலிக்கலாம். முதல் கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகும் தொடர்ந்து இடையூறு செய்யும் வகையில் செயல்படுவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரயில் பயணங்கள் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், ரயில் பயணிகள் இடையே புதிய ரயில்வே விதிமுறை சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை.
மேலும் படிக்க: தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!




ஹெட்போன் இல்லாமல் பாட்டு கேட்டால்
இதனால் மக்களிடையே விழிப்புணர்வு குறித்து தெரியப்படுத்துவது அவசியமாகி உள்ளது. தற்போது, எங்கள் கோரிக்கையை அடுத்து அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் சிலர் தங்களது செல்போன்களில் ஹெட்போன்கள் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது. விளையாட்டு கேம்கள் விளையாடுவதில் ஈடுபட்டு வருகின்றனர். இது அருகில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது.
பயணிகள் தரப்பில் தொடர்ந்து புகார்
இது தொடர்பாக ஏராளமான பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனிடையே, ஜன விஷ்வாஸ் சட்டம், திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவுகளின் கீழ் பயணிகளுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஹெட் போன்கள் இல்லாமல் பாடல் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி