AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Puducherry Diwali Special Grocery Kit : தீபாவளி பண்டியை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக ரூ. 700 மதிப்புள்ள சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில், என்னென்ன இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Oct 2026 16:07 PM IST

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் நவம்பர் 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, வித விதமான பலகாரங்கள் செய்ய திட்டமிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் இல்லத்தரசிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறாக தீபாவளி ஷாப்பிங் களை கட்ட தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அனைத்து ஜவுளி கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 700 மதிப்பிலான மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். இந்த மளிகை தொகுப்பானது புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளன. இந்த மளிகை தொகுப்பில் என்னென்ன பொருள்கள் இடம் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில்,

மேலும் படிக்க: சென்னையில் “சோழ தேசம் 2026” கண்காட்சி.. ஆயிரம் ஆண்டு கால சோழர் வரலாறு.. பிரம்மிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள்.. முழு விவரம்!

தீபாவளி மளிகை தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருள்கள்

  • 2 லிட்டர் சமையல் எண்ணெய்.
  • 2 கிலோ சர்க்கரை.
  • 1/2 கிலோ ரவை.
  • ஒரு கிலோ கடலைப்பருப்பு.
  • 1/2 கிலோ மைதா ஆகியவ 5 மளிகை பொருள்கள் இடம் பெற்றுள்ளது.

யாருக்கெல்லாம் மளிகை தொகுப்பு கிடைக்கும்

தீபாவளி பண்டிகையின்போது, அனைத்து வீடுகளிலும் தீபாவளி பலகாரங்கள் செய்வது வழக்கமாகும். அந்த பலகாரங்களை செய்வதற்கு ஏதுவாக புதுச்சேரி அரசு சார்பில் அத்தியாவசியமான மளிகை பொருட்கள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மளிகை தொகுப்பானது அரசு ஊழியர்கள் மற்றும் கௌரவ ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்த மளிகை தொகுப்பு கிடைப்பதற்கு அரசு உறுதி செய்துள்ளது.

தீபாவளி- பொங்கல் பண்டிகையில் சிறப்பு பரிசு

இதற்காக குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஏழை, எளிய மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் மற்றும் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கமாகும்.

புதுச்சேரி இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி

அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, இந்த மளிகை தொகுப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: வண்டலூர் பூங்காவுக்கு இது தெரியாம போகாதீங்க.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன அது!

Follow Us