சென்னையில் “சோழ தேசம் 2026” கண்காட்சி.. ஆயிரம் ஆண்டு கால சோழர் வரலாறு.. பிரம்மிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள்.. முழு விவரம்!
Chozhar Desam 2026 Exhibition : சென்னை தீவுத்திடலில் "சோழர் தேசம் 2026" என்ற பெயரில் பிரம்மாண்ட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் என்னென்ன பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சென்னை நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள தீவுத்திடல் மைதானத்தில் “சோழர் தேசம் 2026” என்ற வரலாற்று மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 11- ஆம் தேதி) தொடங்கிய இந்த கண்காட்சியானது வருகிற அக்டோபர் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:30 முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் சோழர்களின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில், சோழர் வம்சத்தின் தொடக்கம் ஆட்சி பரப்பு மற்றும் அவர்களின் கடல் கடந்த வெற்றிகளை விளக்கும் வகையில் 20- க்கும் மேற்பட்ட பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள்
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மாமன்னர்களின் சாதனைகள் அவர்களின் நிர்வாக திறமை பற்றிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சோழர் காலத்து வாள்கள், ஈட்டிகள், கேடயங்கள், வில், அம்புகளின் மாதிரிகள் மற்றும் சோழர்களின் புகழ்பெற்ற குடை ஓலை முறை பற்றிய கல்வெட்டு படங்கள் பனை ஓலை சுவடிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், செப்பு திருமேனிகள், நாணயங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் வெற்றி.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா எம்எல்ஏ-வாக பதவி ஏற்பு!




கண்காட்சியில் என்னென்ன உள்ளன
மேலும், சோழர் காலத்து வாழ்க்கை முறைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் தற்போது காணும் வகையில் வி.ஆர் அரங்கு மற்றும் 360 டிகிரி டோம் சினிமா ஆகியவையும் உள்ளது. இவற்றை சுற்றி பார்க்கும் பொதுமக்கள் கண்டிப்பாக கண்டு களிக்க வேண்டும். இது மட்டும் இன்றி கண்காட்சியில்
- ஸ்நோ வேர்ல்ட்.
- சிங்கப்பூர் க்ளோ கார்டன்.
- துபாய் சுரேரியல் நீர்வீழ்ச்சி.
- பேய் அறை மற்றும் விளையாட்டு பகுதிகள்.
- ஜெயின்ட் வீல்.
- கொலம்பஸ்.
- டோரா டோரா உள்ளிட்ட 35- க்கும் மேற்பட்ட ராட்டினங்கள்
- குழந்தைகளுக்கு தனியாக பிரத்தியாக விளையாட்டுப் பகுதி.
- டெல்லி அப்பளம்.
- மிளகாய் பஜ்ஜி
உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் வாங்குவதற்கு கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் 150-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஷ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி நுழைவுக் கட்டணம்
கண்காட்சிக்கான நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 120 முதல் 150 வரை வசூலிக்கப்படுகிறது. 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். நுழைவு கட்டணம் மற்றும் துபாய் சுரேரிகள் நீர்வீழ்ச்சி ஆகியவற்றுக்கு சேர்த்து ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கண்காட்சியில் உள்ள பிற இடங்களை பார்ப்பதற்கு தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க: சேலத்தில் துணிகரம்.. காவலாளியை கட்டிப்போட்டு ரூ. 14 கோடி வெள்ளி பொருள்கள் கொள்ளை.. வடமாநில கும்பல் கைவரிசையா?