AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை மக்களே Ride செல்ல ரெடியா? பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ சேவை நேரம் அறிவிப்பு.. முழு விவரம்!

Poonamallee To Vadapalani Metro Time : சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியால் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ள பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ ரயில் சேவைக்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

சென்னை மக்களே Ride செல்ல ரெடியா? பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ சேவை நேரம் அறிவிப்பு.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Oct 2026 17:18 PM IST

சென்னையில் பூந்தமல்லி முதல் வடபழனி இடையே புதிதாக மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்காக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 11- ஆம் தேதி) தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், நாளை மாலை 4 மணி முதல் இரு மார்க்கங்களிலும் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பின்னர், திங்கட்கிழமை ( அக்டோபர் 12- ஆம் தேதி) முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்கும்.

திங்கள்கிழமை முதல் மெட்ரோ ரயில் சேவை

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. தினந்தோறும் இரு ரயில் முனையங்களில் இருந்தும் ( பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4 வடபழனி மெட்ரோ) கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சட்டம்- ஒழுங்கின் முக்கிய கண்காணிப்பாளர்.. தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்..!

பூந்தமல்லி டூ வடபழனி இடையே எத்தனை ஸ்டேஷன்கள் உள்ளன

பூந்தமல்லி முதல் வடபழனி இடையேயான வழித்தடத்தில்

  • பூந்தமல்லி புறவழிச்சாலை.
  • பூந்தமல்லி பேருந்து நிலையம்.
  • பூந்தமல்லி அரசு மருத்துவமனை.
  • கரையான் சாவடி.
  • குமணன் சாவடி.
  • காட்டுப்பாக்கம்.
  • அயப்பன் தாங்கல்.
  • தெள்ளியாரகரம்.
  • போரூர் புறவழிச்சாலை.
  • போரூர் சந்திப்பு.
  • வடபழனி ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.

வடபழனி முதல் பூந்தமல்லி வரை 15 கிலோ மீட்டர் தொலைவு

வடபழனி, பூந்தமல்லி இரு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூரம் 15 கிலோ மீட்டர் ஆகும். இதில், பூந்தமல்லி முதல் வடபழனி வரை ரூ. 10 முதல் ரூ.40 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில்,

  • பூந்தமல்லி முதல் பூந்தமல்லி பெருஞ்சாலை வரை ரூ. 10.
  • பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு ரூ.20.
  • தெள்ளியாரகரம், போரூர், மூலக்கடை, அய்யப்பன் தாங்கல், போரூர் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு ரூ.30
  • பூந்தமல்லி முதல் வடபழனி வரை ரூ. 40 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!

Follow Us