சட்டம்- ஒழுங்கின் முக்கிய கண்காணிப்பாளர்.. தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்..!
Tamil Nadu Home Secretary Transferred : தமிழக அரசின் கூடுதல் உள்துறை செயலாளர் மணிவாசன் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசில் உள்துறை செயலாளராக மணிவாசன் என்பவர் இருந்து வந்தார். தற்போது, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக உள்துறை செயலாளராக இருந்து வந்த மணிவாசன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு நில நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சிறு தொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த கார்த்திக் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, மின்சார வாரிய நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த அருண் ராய் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நித்த்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர்
நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக இருந்து வந்த வெங்கடேஷ், வேளாண்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல, நில நிர்வாக ஆணையராக இருந்து வந்த ராஜேஷ் லக்கானி, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மின்வாரிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மின்சார உற்பத்தி கழக தலைவராகவும் செயல்படுவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி? தஞ்சை- கோவையில் சிக்கிய 7 பேருக்கு தீவிரவாத தொடர்பு.. என்ஐஏ அதிர்ச்சி தகவல்!




ஆவடி மாநகாராட்சி ஆணையர் பணியிடமாற்றம்
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், அந்த பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு ஆவடி மாநகராட்சி ஆணையராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். தமிழக குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த சிவ கிருஷ்ணமூர்த்தி, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம்- ஒழுங்கின் முக்கிய கண்காணிப்பாளர்
இதே போல, தேனி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த வைத்தியநாதன், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழக குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் என்ற முறையில் மாநிலத்தின் மொத்த சட்டம்- ஒழுங்கு விவகாரங்களை நேரடியாக கண்காணிக்கும் பொறுப்பில் மணிவாசன் ஐஏஎஸ் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Tamil Nadu By Election 2026 Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை.. வாகை சூடப்போவது யார்?