AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக உத்தரவை மீறிய நண்பீஸ்.. கோயிலில் ரீல்ஸ் வெளியிட்ட பெண் நிர்வாகிகள்.. செயல் அலுவலர் போலீசில் புகார்!

TVK Female Bearers Reels Video : தூத்துக்குடி மாவட்டத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ரீல்ஸ் வீடியோ வெளிியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இரு பெண் நிர்வாகிகள் மீது விளாத்திக்குளம் காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலர் புகார் அளித்துள்ளார்.

தவெக உத்தரவை மீறிய நண்பீஸ்.. கோயிலில் ரீல்ஸ் வெளியிட்ட பெண் நிர்வாகிகள்.. செயல் அலுவலர் போலீசில் புகார்!
ரீல்ஸ் பதிவிட்ட தவெக நிர்வாகிகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Oct 2026 22:06 PM IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கக்கூடாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி முத்து கோனாம்மாள் என்பவர் தனது கணவருடன் கோவில் வளாகத்தில் வீடியோ எடுத்து அதனை ரீல்ஸ்-ஆக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், கோவில் நிர்வாகத்தினரின் கவனத்திற்கும் சென்றது.

தவெக பெண் நிர்வாகிகள் மீது போலீசில் புகார்

இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தின் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் செல்போன் மற்றும் கேமராக்கள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனை மீறி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி முத்து கோனம்மாள் என்பவரும், அவரது கணவரும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளனர். எனவே, அவர்கள் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சுங்கத்துறையிடம் சிக்கிய லேண்ட் க்ருசர்.. ஆதவ் அர்ஜூனா நிறுவனத்திடம் ரூ.2.60 கோடி மோசடி.. சிக்கிய கர்நாடக இடைத்தரகர்!

மேலும் ஒரு நிர்வாகி ரீல்ஸ் வெளியீடு

இந்த புகாரை பெற்றுக் கொண்ட விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மற்றொரு பெண் நிர்வாகியான தேவி என்பவர் அதே கோவிலில் வீடியோ பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது பிறந்தநாள் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நிலையில், தன்னை ரிலீஸ் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

தவெக தலைமை உத்தரவை மீறும் நிர்வாகிகள்

இந்த விவகாரமும் கோவில் நிர்வாகத்திற்கு சென்ற நிலையில், இது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் சார்பில் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு புகார்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட கூடாது என்று தவெக தலைமை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மாயமான பெண் சடலமாக மீட்ட விவகாரம்.. எஸ்.ஐ. மீது விழுந்த பேரிடி.. அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி!!

Follow Us