AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது! – நெல்லையில் பரபரப்பு

Nainar Nagendran Arrest: காவல்துறையினரின் தடையை மீறி திருநெல்வேலியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட நயினார் நாகேந்திரனை, தச்சநல்லூர் சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்றதால் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது! – நெல்லையில் பரபரப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Nov 2026 16:26 PM IST

நவம்பர் 24, 2026: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் நோக்கிச் செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – உச்ச நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். அதேபோல், திருவண்ணாமலையில் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதற்கிடையே, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த விவகாரம் அரசியல் மற்றும் மத ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை.. இன்று 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எங்கெல்லாம்?

பலத்த போலீஸ் பாதுகாப்பு – மதுரையில் 144 தடை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரையிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மலைப்பாதை மற்றும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன் வீட்டில் போலீசார் குவிப்பு

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் அங்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? – ஸ்டாலின் கடும் விமர்சனம்!

இதையடுத்து, திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அவரை வீட்டுக்காவலில் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருப்பரங்குன்றம் செல்ல முயன்றபோது கைது

இதற்கிடையே, காவல்துறையினரின் தடையை மீறி திருநெல்வேலியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட நயினார் நாகேந்திரனை, தச்சநல்லூர் சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்றதால் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் திருப்பரங்குன்றம் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

 

Follow Us