AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டு வாசல்களில் குவிந்து கிடக்கும் சாக்கடைக் கழிவுகள்.. கார்த்திகை தீபத் திருநாளில் தவிக்கும் கோவை பொதுமக்கள்!

Coimbatore Residents Distressed: கார்த்திகை தீபத் திருநாளில் கோவை சிவானந்த காலனி, ரத்தினபுரி வ.உ.சி வீதியில் வீட்டு வாசல்களின் முன்பே சாக்கடைக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் கோலமிட்டு தீபம் ஏற்ற முடியாமல் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த வாரம் தூர்வாரப்பட்ட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுவதாகக் குற்றம் சாட்டி மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டு வாசல்களில் குவிந்து கிடக்கும் சாக்கடைக் கழிவுகள்.. கார்த்திகை தீபத் திருநாளில் தவிக்கும் கோவை பொதுமக்கள்!
வீதியில் சாக்கடை
Sekaran S
Sekaran S | Updated On: 24 Nov 2026 14:17 PM IST

கோவை, நவ.24: தமிழ்நாடு முழுவதும் இன்று கார்த்திகை தீபத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை சிவானந்த காலனி மற்றும் ரத்தினபுரி பகுதியில் உள்ள வ.உ.சி வீதியில் வீட்டு வாசல்களின் முன்பே சாக்கடைக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், கோலமிட்டு விளக்கேற்ற முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் வேதனையும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். கோவை, சிவானந்த காலனி, ரத்தினபுரி கருமாரியம்மன் கோவில் அருகே வ.உ.சி வீதி செல்லும் பாதையில், கடந்த பருவ மழைக் காலத்தில் பெய்த கன மழையின் போது சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடைக் கால்வாயைத் தூர்வாரினர்; ஆனால், கால்வாயிலிருந்து அள்ளப்பட்ட கழிவுகளைக் காய்ந்த பிறகு உடனடியாக அப்புறப்படுத்தாமல், ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் அப்படியே குவித்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்கள் – வனத்துறையினர் இடையே வாக்குவாதம்.. கார்த்திகை தீபத் திருநாளில் அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

துர்நாற்றம், சுகாதாரச் சீர்கேடு, தவிப்பு:

சாக்கடையிலிருந்து அள்ளப்பட்ட கழிவுகள் அகற்றப்படாமல் பல நாட்களாக வீட்டு வாசல்களிலேயே கிடப்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால், வீட்டு வாசல்களைச் சுத்தம் செய்து கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டிய சூழலில், வாசல் முழுவதும் சாக்கடைக் கழிவுகள் குவிந்து கிடப்பது குடியிருப்புவாசிகளை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

பொதுமக்களின் வேதனையான கேள்விகள்:

பண்டிகை நாளிலும் சுகாதாரமற்ற சூழலில் சிக்கியிருப்பதைக் குறித்து வ.உ.சி வீதி பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று கார்த்திகை தீபம் கொண்டாடும் நிலையில் தங்கள் தெருவுக்கு மட்டும் இப்படியா என்றும், வீட்டு வாசலில் சாக்கடைக் கழிவுகளை வைத்துக் கொண்டு எப்படி கோலமிட்டு தீபம் ஏற்றுவது என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

அன்றாடப் போக்குவரத்து, சுகாதாரப் பாதிப்புகள்:

மேலும், வீட்டு வாசல்கள் முன்பு குவிக்கப்பட்டுள்ள கழிவுகளால் அப்பகுதி வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தூர்வாரப்பட்ட கழிவுகள் காய்ந்த நிலையில் காற்றில் பரவுவதாலும், துர்நாற்றம் தொடர்ந்து நீடிப்பதாலும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுவதாகக் குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சிறப்பு மிக்க கார்த்திகை மாத பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. பக்தர்களே இதை நோட் பண்ணுங்க!

மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை:

கடந்த வாரமே தூர்வாரப்பட்ட கழிவுகளை இதுவரை அப்புறப்படுத்தாத மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் பண்டிகை நாளில் தவிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு வ.உ.சி வீதியில் குவிந்து கிடக்கும் சாக்கடைக் கழிவுகளை முழுமையாக அப்புறப்படுத்தித் தெருவைச் சுத்தம் செய்ய வேண்டும் எனக் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us