யாரையுமே நம்பாத.. லக்ஷ்மி பிரியாவுக்கு குடும்பம் கொடுத்த எச்சரிக்கை – பிக் பாஸ் ப்ரோமோ இதோ!
Lakshmi Priyas Family Advises: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 12வது வாரத்தில் உள்ள நிலையில், இந்த வாரம் முழுக்க பேமிலி வாரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் லக்ஷ்மி பிரியாவின் குடும்பம் அவரை நேரில் சந்தித்த நிலையில், அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அது குறித்த ப்ரோமோ பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கொண்டாடப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் (22/11/2026) 79வது நாளில் உள்ளது. தொடர்ந்து 3 வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த வாரத்தில் சாதிகா (Shathiga) மற்றும் முகேஷ் (Mukesh) என இரு போட்டியாளர்களும் ஒன்றாக வெளியேறியிருந்தார்கள். அதை தொடர்ந்து தற்போது இந்த வீட்டில் மொத்தமாகாவே வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். கடந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ ஃபினாலே-கான டாஸ்குகள் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், அதில் தன்யா அதை வென்றுள்ளார். அதனால அவர் இந்த நிகழ்ச்சியின் இறுதி வரையில் இருப்பார்.
மேலும் இந்த 12வது வாரம் முழுக்க பேமிலி வாரம் என்ற நிலையில், முதல் பேமிலியாக வினோத் பாபுவின் குடும்பம் வந்திருந்தது. அதை தொடர்ந்து இன்று (24/11/2026) வெளியான 2வது ப்ரோமோவில், லக்ஷ்மி பிரியாவின் குடும்பம் வந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. மேலு அவர்கள் லக்ஷ்மி பிரியாவுக்கு (Lakshmi Priya) அட்வைஸ் மற்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள்.
இதையும் படிங்க: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்ட்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
லக்ஷ்மி பிரியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த அவரின் பேமிலி:
இந்த ப்ரோமோவில், லக்ஷ்மி பிரியாவின் குடும்பம் அவரை சந்திப்பதற்கு பிக் பாஸ் வீட்டினுள் நுழைவது போல காட்டப்பட்டுள்ளது. அவரின் அப்பா, அம்மா மற்றும் சகோதரர் என மூவர் வந்துள்ளனர். அதன் பிறகு தனது குடும்பத்துடன் பேசிய லக்ஷ்மி பிரியா, “தனது கேம் எப்படி இருக்கிறது?” என கேட்டிருந்தார். உடனே அவரின் அம்மா, “இப்போதுதான் நீ சூப்பராக விளையாடுற.. இதிலிருந்து ஒரு புள்ளி கூட நீ கீழே வர கூடாது. கேம் பற்றி நீ பிளான் சேந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இதையும் படிங்க: பிக் பாஸில் முதல் ஆளாக வந்த வினோத் பாபு பேமிலி – மனைவி கொடுத்த அட்வைஸ்!
எல்லாத்திலையுமே முதலில் இருக்கவேண்டும் என்று பாரு.. இதுதான் உனது மிஷ்டேக். யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இங்க இல்ல. ஏன்னென்றால் நம்ம இங்க கேம் விளையாட வந்திருக்கிறோம்” என கூறியிருந்தார். அதன் பிறகு பேசிய அவரின் சகோதரன், “யாரையுமே நம்பாத” என கூறியிருந்தார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 79வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day79 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/n2IVLh7Gdm
— Vijay Television (@vijaytelevision) November 24, 2026
இந்த நிகழ்ச்சியானது தற்போது சிறப்பாக 12வது வாரத்தில் உள்ளது. இன்னும் 3 வாரங்களுக்குள் இந்நிகழ்ச்சியானது முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இன்னும் இந்த போட்டியில் 8 போட்டியாளர்கள் உள்ள நிலையில், வரும் வாரங்களில் இருவர் இருவராக வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது. யார் இந்த போட்டியின் டைட்டில் வின்னராவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.



