AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Inji Vellam Movie: ஆச்சி ஆச்சி… விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Inji Vellam First Single: ஒருகாலத்தில் பான் இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவந்தவர் மணிரத்தினம். இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளியாக காத்திருக்கும் படம் இஞ்சி வெல்லம். இப்படத்தின் வெளியீட்டிற்கு சில வாரங்கள் மட்டும் இருக்கும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Inji Vellam Movie: ஆச்சி ஆச்சி… விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் இஞ்சி வெல்லம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இஞ்சி வெல்லம் படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Nov 2026 13:02 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பான இயக்குநர்களில் ஒருவராக போற்றப்பட்டுவந்தவர் இயக்குநர் மணிரத்தினம் (Director Mani Ratnam). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. இறுதியாக இவரின் இயக்கத்தில் தக் லைஃப் (Thug Life Movie) என்ற படமானது வெளியான நிலையில், அது எதிர்பாராத தோல்வியை சந்தித்திருந்தது. இந்த படத்தில் சிலம்பரசன், கமல்ஹாசன் மற்றும் திரிஷா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு மணிரத்தினம், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் சாய் பல்லவியை (Sai Pallavi) வைத்து “இஞ்சி வெல்லம்” திரைப்படத்தை (Inji Vellam Movie) இயக்குவராக கூறப்பட்டது. இதை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR.Rahman) இசையமைத்துவந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் முதல் பாடலான “ஆச்சி ஆச்சி” (Aachi Aachi Song) பாடல் ரிலீஸ் எப்போது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்ட்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இஞ்சி வெல்லம் படத்தின் முதல் சிங்கிள் ஆச்சி ஆச்சி ரிலீஸ்:

இந்த இஞ்சி வெல்லம் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். இப்படமானது முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிள் மற்றும் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் “ஆச்சி ஆச்சி” என்ற முதல் பாடலானது, 2026 நவம்பர் 25ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த அறிவிப்பான் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இஞ்சி வெல்லம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு பகிர்ந்தா எக்ஸ் பதிவு:

இந்த படமானது காதல் மற்றும் ரோமெண்டிக் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். நடிகை சாய் பல்லவி முதல் முறையாக மணிரத்தினம் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார் என்ற நிலையில், அவரின் வாழ்நாள் ஆசை என்றே இதை பல மேடைகளில் அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நான் அடுத்தடுத்தப் பாகங்களாக எடுக்க நினைத்த படம் அதுதான் – இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்

இந்நிலையில் இப்படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட நிலையில், 2027ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தக் லைஃப் பட தோல்விக்கு பின், மணிரத்தினத்திற்கு இப்படம் வெற்றியாக மையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us