AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாகிறாரா?.. வீட்டில் குவிந்த போலீசார் தீவிர விசாரணை..

TVK MLA Arul Vignesh police inquiry Kallakurichi: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், டிஐஜி அல்லது டிஜிபி தலைமையில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாகிறாரா?.. வீட்டில் குவிந்த போலீசார் தீவிர விசாரணை..
தவெக எம்எல்ஏ
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Nov 2026 12:51 PM IST

கள்ளக்குறிச்சி, நவ.24: கள்ளக்குறிச்சி தனித் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தகவல் பகிரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சியில் உள்ள அருள் விக்னேஷின் இல்லத்திற்குத் தனிப்பிரிவு காவலர் சரவணகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கள்ளக்குறிச்சி மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்.. மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை ஆணையர் ஆஜராக உத்தரவு!

நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்:

முன்னதாக இந்தப் புகார் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தரப்பில் எந்தவொரு பதிலும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அல்லாமல் டிஐஜி அல்லது டிஜிபி தலைமையிலான அதிகாரி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் போக்கு தீவிரமடைந்துள்ளது.

எம்எல்ஏ-வின் முந்தைய விளக்கம்:

இந்தப் புகார் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அருள் விக்னேஷ், தான் எந்தவொரு ஆபாசக் குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதிகளில் மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இன்றைய தினம் காலையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வீட்டிற்குள் சென்ற அவர், தொடர்ந்து வீட்டிற்குள்ளேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; மேலும் அவரது வீடு, கட்சி அலுவலகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் த.வெ.க. நிர்வாகிகள் யாரும் காணப்படாத நிலையும் நிலவுகிறது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் உச்சகட்டப் பாதுகாப்பு.. 5,600-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு; மாலையில் மகாதீபம்!!

தொடரும் விசாரணை, அடுத்தகட்ட எதிர்பார்ப்பு:

கள்ளக்குறிச்சியில் உள்ள அருள் விக்னேஷின் இல்லத்தில் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறிது நேரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல்துறை விசாரணையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Follow Us