ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் ஆர்யவின் ஹெலோ காதல் படத்தின் ட்ரெய்லர்
Hello Kadhal Movie Trailer Out Now | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஹெலோ காதல் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா (Actor Arya). சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஆர்யா பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ஆர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகும் படங்களிலேயே அதிக அளவில் படங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சீரியசான கதைகளை மையமாக வைத்து உருவாகும் படங்களிலேயே நடித்து வந்தார்.
இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகர் ஆர்யா ரொமாண்டிக் காமெடி பாணியில் ஒரு படத்தில் நடித்துள்ளார். அதன்படி ஹெலோ காதல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தினை இயக்குநர் நிகில் முரளி எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் ஆர்யா உடன் இணைந்து நடிகர்கள் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா நாயகியகிகளாக நடித்து உள்ள நிலையில் பலர் இணைந்து நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.




ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் ஹெலோ காதல் படத்தின் ட்ரெய்லர்:
இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் நடிகர் ஆர்யாவிற்கு இரண்டு நாயகிகள் உள்ளதும், அவர்களில் ஒருவர் காதலியாகவும் மற்றொருவர் மனைவியாகவும் இருப்பதும் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. இவர்களுக்கு இடையே சிக்கி ஆர்யா என்ன ஆகிறார் என்பதே இந்தப் படத்தின் கதையாக இருக்கும் என்று ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்தப் படம் வருகின்ற 4-ம் தேதி டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… சென்சார் பிரச்சனையை எதிர்கொள்ளும் மணிகண்டனின் மக்கள் காவலன் படம்? வைரலாகும் தகவல்
நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Here’s the trailer ❤️❤️❤️
See u in Theatres#HelloKadhal Trailer out now
▶️ https://t.co/2vaXDhXSbH
#HelloKadhalFromDec4
@TSPoffl @SilverGrainOffl @tkishore555 @NikhilMuraly @gvprakash @JeevaSankar @binunepolean @jyothishnairm @halithashameem @onlyartmohan @silva_stunt @naushadahmed_97 @sherif_choreo @Azarchoreo @Lyricist_Vivek @iamKarthikNetha @VishnuEdavan1 @NeerajMadhavv @Synccinema #RajakrishnanMR @narendrancm @gopiprasannaa @Ruben_trailers @dtmvfx @Zee5South @ZeeTamil @thinkmusicindia @RIAZtheboss @ParasRiazAhmed1 @themagicinwhite
— Arya (@arya_offl) November 23, 2026
Also Read… நட்புக்காக படத்தின் முதல் சாய்ஸ் சரத்குமார் கிடையாது – தயாரிப்பாளர் விளக்கம்