ப்ரீ ரிலீஸ் கல்லா கட்டும் ஆர்யாவின் ஹலோ காதல் படம் – வைரலாகும் தகவல்!
Hello Kadhal Movie Presales Update | நடிகர் ஆர்யாவின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஹலோ காதல் படம். இந்தப் படம் ப்ரீ சேல்சிஸ் நல்ல வருமானத்தை ஈட்டி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா (Actor Arya). இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து ரொமாண்டிக் காமெடி ட்ராமா பாணியில் உருவாகும் படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து ஜாலியான படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் ஆர்யா பிறகு வழுவான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாள மொழியில் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் ஹலோ காதல்.
இந்த ஹலோ காதல் படத்தை இயக்குநர் நிகில் முரளி எழுதி இயக்கி உள்ளார். ரொமாண்டிக் ட்ராமா பாணியில் நடிகர் ஆர்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்து இருப்பது அவரது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகைகள் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜெயபிரகாஷ் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




ப்ரீ ரிலீஸ் கல்லா கட்டும் ஆர்யாவின் ஹலோ காதல் படம்:
ஹலோ காதல் திரைப்படம், காதல்-நகைச்சுவை மற்றும் முக்கோணக் காதல் கதையம்சம் கொண்ட படம் என்பதால், திரையுலகில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 20 கோடி ரூபாய் ஆகும். இதில், அனைத்து மொழிகளுக்கான சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஜீ டெலிவிஷன் நிறுவனம் 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மேலும், படத்தின் இசை உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் 3 கோடி ரூபாய்க்குப் பெற்றுள்ளது. இதன் மூலம், இப்படம் வெளியாவதற்கு முன்பே மொத்தம் 21 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளது.
Also Read… என்னப்பா இது… அஸ்மிதாவால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேசன் மற்றும் வினோத்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#HelloKadhal is already receiving GOOD REPORTS in the industry for its rom-com and love triangle genre. The movie’s entire budget is ₹20Cr. But Zee Television has already brought the all-language satellite/digital rights for ₹18Cr, and the audio rights have been bagged by Think Music for ₹3Cr, with a total of ₹21Cr revenue from this itself.
It’s shaping up to be a successful venture for actor/producer #Arya 🔥
In cinemas December 4th 2026
Source – Valai Pechu
— Movies Singapore (@MoviesSingapore) October 26, 2026
Also Read… ஜெர்மனியில் அரசன் ரீயூனியன்… இணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் – ஆண்ட்ரியா போட்டோஸ்!