அதிரடி காட்டும் அர்னாப்.. திசையை மாற்றி நகரும் புயல்.. சென்னையில் கடல் சீற்றம்.. அலையில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்!
Cyclone Arnab Chennai Sea Rough Condition : ஆந்திர மாநிலத்தில் அர்னாப் புயல் கரையை கடந்து வரும் நிலையில் , சென்னையில் திருவொற்றியூர், எண்ணூர், வடசென்னை, மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது .
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அர்னாப் புயலாக உருவாகி ஆந்திர மாநிலத்தில் கரையே கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த புயலானது நாளை அதிகாலை கரையே கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆந்திர மாநிலம், பாப்பட்லா- விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக அர்னாப் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. முதலில் வடமேற்கு பகுதியில் கரையே கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேற்கு வட மேற்கு திசையில் மாறி கரையே கடந்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர், எண்ணூர், வடசென்னை உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல் அதிகளவு சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், அலை 2 மணி நேரத்துக்கு மேலாக வேகமாக எழுந்து சீற்றத்துடன் காணப்படுகிறது.
வாகனங்களை அடித்து சென்ற கடல் நீர்
இதனால், எண்ணூர் பகுதியில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கடல் நீர் அடித்து சென்றது. கார், ஆட்டோ, லாரி ஆகிய வாகனங்கள் மீது ஆக்ரோசமாக மோதியது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். சென்னையில் கடற்கரையை ஒட்டி பெரிய அளவிலான கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கற்களைத் தாண்டி கடல் அலை ஆக்ரோஷமாக மோதி வெளியேறி வருகிறது.
மேலும் படிக்க: ரயில் பயணிகளே இனி இந்த வசதி கட்.. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நோ அனுமதி.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!




150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்று
இதனால், எதிர்பார்க்கப்பட்டதை விட அர்னாப் புயல் மிகத் தீவிரமாக உள்ளது. இந்த புயலால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் வேகம் அதிகரித்து மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால், நாளை முற்பகல் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் கரையே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 கிலோ மீட்டர் வேகத்தில் அர்னாப் புயல்
தற்போதைய தகவல்களின்படி அர்னாப் புயல் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அத்துடன், இந்த புயலின் முன் பகுதி ஆந்திர மாநில கடற்கரையை கடந்து வரும் நிலையில், சூப்பர் புயலாக மாறாத நிலை ஏறபட்டுள்ளது. அத்துடன், கடலில் நிலை கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தாலும், புயலின் வேகம் இன்னும் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அதன் பாதிப்பு குறைந்துள்ளது என்றே கூறலாம். இந்த புயல் கரையை கடந்து வலுவிலந்த பின்னரே இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்று தெரியவரும்.
மேலும் படிக்க: சிறைவாசம் அனுபவிக்கும் அன்பில் மகேஷ்.. முதல் வகுப்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும்.. அடேங்கப்பா லிஸ்ட் பெருசா போகுது!