AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனுஷின் ஓம் படத்தின் ஓவர்சீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வெளியானது அப்டேட்

OM Movie overseas rights update | நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷின் ஓம் படத்தின் ஓவர்சீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வெளியானது அப்டேட்
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Oct 2026 21:21 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதே போல இந்த ஓம் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இவர்களின் கிளிம்ஸ் வீடியோ வெளியான நிலையில் அதனைப் பார்க்கும் போது மம்முட்டி கேங்ஸ்டராகவும், சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளது தெரிகிறது. சாய் பல்லவி முதன்முறையாக இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் ஓம் படத்தின் ஓவர்சீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

முன்னதாக இந்தப் படம் அக்டோபர் மாதமே வெளியாக இருந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்தின் ரிலீஸ் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை தொடர்ந்து பிரபல நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையைப் பிரபல நிறுவனமான ஃபார்ஸ் பிலிம் கோ எல்எல்சி கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அல்லு அர்ஜூன் ராக்கா படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!

ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan: அதை நான் உண்மையிலே செய்தேன்.. விமர்சனங்களை காமெடி செய்த சிவகார்த்திகேயன்!

Follow Us