AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன? சிவகார்த்திகேயன் விளக்கம்

Actor Sivakarthikeyan about villain roles | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிக்காததற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன? சிவகார்த்திகேயன் விளக்கம்
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2026 16:09 PM IST

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி பிறகு நாயகனாக நடித்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து நாயகனாக நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தொடர்ந்து அவ்வாறான படங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அதிக அளவில் அவர் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் பாங்களில் நடித்து வருவது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியானது.

அந்தப் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தற்போது சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன?

இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் வில்லன் கதாபபாத்திரத்தில் நடிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்தப் பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, எனது அடிப்படை நோக்கம் ரசிகர்களை மகிழ்விப்பதே ஆகும். வில்லன் கதாபாத்திரங்களுக்கான சில கதைகள் வருகின்றன. அவை சுவாரஸ்யமான, கலகலப்பான வில்லன் கதாபாத்திரங்களாகவோ அல்லது இரட்டை வேடங்களாகவோ இருந்தால் நான் ஏற்றுக்கொள்வேன். ரசிகர்கள் என்னை நாயகனாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அந்த பிம்பத்தை நான் சிதைக்க விரும்பவில்லை. ஒரு நடிகர் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே நான் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… 12 வருசத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படம்… நஸ்ரியா சொன்ன விசயம் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓம் படத்திலிருந்து சாய் பல்லவியின் கிளிம்ஸ் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குநர்

Follow Us