நடிகர் சூரியின் 7-வது படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் பூஜை போட்டோஸ்!
Actor Soori 7th Movie Photos | நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் மண்டாட்டி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவரது 7-வது படத்தின் பூஜை கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி (Actor Soori). இவர் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலமாக நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன், விடுதலை பாகம் 2, மாமன் மற்றும் மண்டாட்டி என நடிகர் சூரி அடுத்தடுத்து 6 படங்களில் நாயகனாக நடித்து உள்ளார். இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் இதுவரை வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இறுதியாக தமிழ் சினிமாவில் நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான மண்டாட்டி படம் வசூலிலும் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சூரியின் நடிப்பில் மண்டாட்டி படம் தற்போது திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக அவர் நாயகனாக நடிக்க உள்ள படத்தின் பூஜை கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




நடிகர் சூரியின் 7-வது படத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்:
அதன்படி நடிகர் சூரியின் நடிப்பில் 7-வதாக உருவாகும் படத்திற்கு தற்காலிகமாக சூரி 7 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ரவிக்குமார் எழுதி இயக்க உள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ள நிலையில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் கோலாகலமாக நடைப்பெற்றது. அந்த பூஜையில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் க்ளாப் அடித்து படத்தினை தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… 5 ஆண்டுகளை கடந்தது உடன்பிறப்பு படம்… இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
சூரி 7 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Soori7 begins with an auspicious pooja ceremony ✨
@Siva_Kartikeyan sir graced the occasion and wished the entire team ❤️
Starring the talented @sooriofficial
Directed by the brilliant @Ravikumar_Dir
Prestigiously Produced by @MythriOfficial
In Tamil and Telugu. https://t.co/s4vE7XYd2F
— Mythri Movie Makers (@MythriOfficial) October 14, 2026
Also Read… பிக்பாஸில் ப்ளான் போட்டமாதிரி வைரத்தை திருடி மறைத்த டிடிஎஃப் வாசன் – வைரலாகும் வீடியோ