AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மலையாள சினிமாவில் இந்த ட்ரைவிங் லைசன்ஸ் படத்தை பார்த்து இருக்கீங்களா? மிஸ் செய்யாதீர்கள்!

Driving Licence Movie OTT Update Here | மலையாள சினிமாவில் நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ட்ரைவிங் லைசன்ஸ். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.

மலையாள சினிமாவில் இந்த ட்ரைவிங் லைசன்ஸ் படத்தை பார்த்து இருக்கீங்களா? மிஸ் செய்யாதீர்கள்!
ட்ரைவிங் லைசன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 Oct 2026 17:52 PM IST

மலையாள சினிமாவில் நடிகர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் அவர்கள் அடுத்தடுத்தப் படங்களில் மற்ற நடிகர்கள் நாயகனாக நடித்து இருந்தாலும் ஒரு சிறிய வேடம் அது படத்தில் முக்கியமான வேடம் என்றால் அதனை நிச்சயமாக ஏற்று நடித்து வருகின்றனர். அவர்கள் அந்த இடத்தில் ஸ்டார் வேல்யூவை பார்க்கவில்லை. மாறாக படத்தையும் அதன் கதாப்பாத்திரத்தையும் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தால் நடிப்பதை தவரவிடாமல் நடித்து வருகின்றனர். மேலும் இரண்டு உச்ச நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டிய கதைகளில் அவர்கள் எந்தவித ஈகோவும் இல்லாமல் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இதன் காரணமாகவே மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ட்ரைவிங் லைசன்ஸ் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.

அதன்படி இந்த ட்ரைவிங் லைசன்ஸ் படத்தை இயக்குநர் லால் ஜூனியர் இயக்கி இருந்தார். மேலும் திரைக்கதையை சாச்சி எழுதி இருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் மியா ஜார்ஜ்,
தீப்தி சதி, சைஜு குருப், சுரேஷ் கிருஷ்ணா, லாலு அலெக்ஸ், மேஜர் ரவி, நந்து, சிவாஜி குருவாயூர், ஆதிஷ் பிரவீன், அருண், அனீஷ் ஜி.மேனன், சலீம் குமார், விஜயகுமார், நந்து பொதுவால், கலாபவன் நவாஸ், சோஹன் சீனுலால், மிருதுல் நாயர், போபன் ஆலும்மூடன், சுனில் பாபு, கலாபவன் ஹனீப், தாமஸ் குரியகோஸ், ஷபீக் ரஹ்மான், ரம்யா பணிக்கர், விஜயராகவன், இடைவெல பாபு மற்றும் மாஃபியா சசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

ட்ரைவிங் லைசன்ஸ் படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் பெரிய நாயகனாக உள்ளார். அதே வேலையில் சுராஜ் வெஞ்சரமூடு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் பிரித்விராஜின் தீவிர ரசிகராக உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பிரித்விராஜின் லைசன்ஸ் தொலைந்துபோக அவர் மீது வழங்கு ஒன்று பதியப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து அவர் லைசன்ஸ் வாங்குவதற்காக சுராஜ் வெஞ்சரமூடுவின் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு சுராஜ் வெஞ்சரமூடு மிகுந்த சந்தோசத்தில் அவருடன் செல்ஃபி எடுக்க நினைக்கும் போது அதனை பிரித்விராஜ் மறுக்கினார்.

Also Read… முன்பதிவில் ஜெயிலர் 2 வசூலித்தது இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்

இதனால் சுராஜிற்கு வருத்தம் ஏற்பட தனது ஈகோ உச்சத்திற்கு சென்று பிரித்விராஜ் சுகுமாரனுக்கு லைசன்ஸ் வழங்குவதை இழுத்து அடிக்கிறார். மேலும் பல டெஸ்ட்களையும் அவருக்கு வைக்கிறார். இறுதியில் எப்படி லைசன்ஸ் பிரித்விராஜிற்கு கிடைக்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் வீடியோ

Follow Us