AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீவிர ரசிகை…. முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி

Rashmika Meets CM Vijay : நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி இணைந்து நடித்திருக்கும் படம் ரணபாலி. இந்தப் படம் வருகிற அக்டோபர் 15, 2026 அன்று திரைக்குவரவுள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இருவரும் முதல்வர் விஜய்யை நட்பு ரீதியாக சந்தித்துள்ளனர்.

தீவிர ரசிகை…. முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவுடன் முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Oct 2026 22:03 PM IST

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி இணைந்து நடித்திருக்கும் படம் ரணபாலி. இந்தப் படம் வருகிற அக்டோபர் 15, 2026 அன்று திரைக்குவரவுள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழ் விளம்பர நிகழ்சிக்காக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா சென்னை வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் முதல்வர் விஜய்யை நட்பு ரீதியாக சந்தித்துள்ளனர்.

முதல்வர் விஜய்யை சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி

இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சாரைச் சந்தித்தேன்.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவருடைய தீவிர ரசிகையாக இருந்து வந்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பதைப் பார்த்து வியந்து மகிழ்கிறேன். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. சார், உங்கள் மீது எப்போதும் அளவற்ற அன்பும், உங்கள் எதிர்காலப் பயணத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : பார்வதியின் நடிப்பில் வெளியான பிரதம திருஷ்டிய குட்டக்கர் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!

முதல்வர் விஜய்யை சந்தித்தது தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பதிவில், தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான, மகிழ்ச்சியான நேரத்தைக் கழித்தேன். நீண்ட நாளாக இருந்த பரபரப்பான நாளுக்குப் பிறகும், எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றார். வாழ்க்கை, வேலை மற்றும் உலகம் குறித்த பல தனிப்பட்ட அனுபவங்களையும், ஆழமான கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். ஒரே ஒரு சந்திப்பிலேயே சார் எனக்குப் பிடித்தமானவராகிவிட்டார். மீண்டும் சந்திக்கும் நாள் வரை, என் அன்பும் மரியாதையும் எப்போதும் உங்களுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகாவின் பதிவு

 

திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி இணைந்து நடித்துள்ள படம் ரணபாலி. இந்த படமானது கடந்த 1960களில் இந்தியாவில் நடந்த பஞ்சம் தொடர்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்கியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இதையும் படிக்க : SK27: சிவகார்த்திகேயனின் SK27 படத்தில் இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர்!

இந்த ரணபாலி படமானது 60களில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை கஸ்தூரி, ஹாலிவுட் நடிகர் ஆர்னோல்ட் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற அக்டோபர் 15, 2026 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படத்துடன் இணைந்து வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us