AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Lokesh Kanagaraj : அப்டேட் விரைவில்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிவு!

AA23 Movie Update: சினிமா வட்டாரங்களில் அதிகமாக புகழப்படும் நடிகர்களில் ஒருவர்தான் அல்லு அர்ஜுன். இவர் ராக்கா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், இதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைகிறார். இவர் இணையும் AA23 படம் கைவிடப்பட்டது என கூறப்பட்ட நிலையில், அது குறித்து லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

Lokesh Kanagaraj : அப்டேட் விரைவில்.. அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிவு!
லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Oct 2026 17:04 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச ஸ்டார் நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 21 படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக வெளியான திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2). இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது ஆரம்பத்தில் AA22 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ராக்கா (Raaka) என படக்குழு டைட்டில் வைத்திருக்கும் நிலையில், ஹாலிவுட் படத்தை போலவே மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது.

இப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் அல்லு அர்ஜுன் AA23 படத்தில் இணைகிறார். சமீபகாலமாக இப்படம் கைவிடப்பட்டதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவந்த நிலையில், அதற்கெல்லாம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் ஓபன் நாமினேஷனால் அவினாஷ் – சாந்தினி இடையே ஏற்பட்ட பிரச்சனை… வைரலாகும் வீடியோ

அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து லோகேஷ் கனகராஜ்:

இயக்குனரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார். இது தொடர்பான பதிவை பகிர்ந்து. “AA23 படத்தின் சுவாரஸ்யமான அப்டேட் விரைவில் வெளியாகும்” என அதில் அவர் கூறியுள்ளார். மேலும் இணையத்தில் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதில் இப்படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார் மறுத்து கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: முதல் முறை இங்கு நீ இன்றி நடக்கிறேன் தனியாக… 14 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் மாற்றான் படம்!

அல்லு அர்ஜுனை சந்தித்தது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இறுதியாக டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானார். இதன் பிறகு தற்போது AA23 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது ராக்கா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவரும் நிலையில், இதன் ஷூட்டிங் விரைவில் நிறைவடையும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் AA23 படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூஜைகளுடன் தொடங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us