லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்க் எப்போது? வைரலாகும் தகவல்
Allu Arjun Lokesh Kanagaraj Movie Shooting Update | இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தற்போது தகவல்கள் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, கமல் ஹாசன், விஜய் மற்றும் ரஜினிகாந்த் என பலர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து உள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வந்த இவர் தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி அவர் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டிசி.
இந்தப் படம் ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கான பணிகளில் பிசியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.




லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்க் எப்போது?
அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள, தற்காலிகமாக ‘AA23’ என்று பெயரிடப்பட்டுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, 2026 டிசம்பரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன; சிலர் இது 2027 பிப்ரவரியில் தொடங்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, டிசம்பர் மாதத் திட்டம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட அட்டவணை அல்ல, மாறாக ஒரு தகவல் மட்டுமே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Also Read… புருஷன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#AlluArjun and #LokeshKanagaraj’s much-awaited collaboration, tentatively titled #AA23, is reportedly scheduled to begin shooting in December 2026.
However, reports about the start date remain conflicting, with some suggesting a February 2027 start.
The December timeline should therefore be treated as a reported update, not an officially confirmed schedule.
— Filmyscoops (@Filmyscoopss) October 11, 2026
Also Read… பிக் பாஸில் லக்ஷ்மி பிரியா – ஷமாவுக்கும் நடந்த டீல்.. குறும்படம் போட்ட விஜய் சேதுபதி!