AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Bigg Boss 10: பிக் பாஸில் குழந்தை போல பேசிய டிடிஎப் வாசன்.. கலாய்த்த விஜய் சேதுபதி!

TTF Vasan And Vijay Sethupathis Hilarious Promo: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இதில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வார இறுதியில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்த நிலையில், அதில் டிடிஎப் வாசனை கலாய்த்து பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss 10: பிக் பாஸில் குழந்தை போல பேசிய டிடிஎப் வாசன்.. கலாய்த்த விஜய் சேதுபதி!
டிடிஎப் வாசன் மற்றும் விஜய் சேதுபதிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 10 Oct 2026 19:40 PM IST

தமிழில் சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களுக்கு பெயர்போன தொலைக்காட்சி விஜய் டிவி (Vijay Tv). இந்த தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பதுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தற்போது தமிழில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தற்போது மொத்தமாக இந்நிகழ்ச்சியில் 16-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருகிறார்கள். மேலும் 5வது வாரத்தின் தொடக்கத்தில் டிடிஎப் வாசன் (TTF Vasan), அக்ஷிதா மற்றும் கரீஷ்மா என மொத்தம் மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்திருந்தனர்.

இந்த போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து ஒருவார்த்தை கடந்த நிலையில், அவர்களின் நிலை குறித்தும் மற்ற போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதியில் வெளியான 3வது ப்ரோமோவில், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் டிடிஎப் வாசன் இருவரும் பேசுவதுபோல உள்ளது. இதில் டிடிஃஎப் வாசனை விஜய் சேதுபதி கலாய்த்து பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: எஸ்.ஜே. சூர்யா ஒரு நடிப்பு அரக்கன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

டிடிஎப் வாசனை கலாய்த்து பேசிய விஜய் சேதுபதி:

பிக் பாஸ் ப்ரோமோவில், விஜய் சேதுபதியிடம் டிடிஎப் வாசன், சாந்தினி தன்னுடன் விளையாட விருப்ப பட்டதால் அவருடன் சேர்ந்து விளையாட ஒத்துக்கொண்டேன். என குழந்தை போல பேசியிருந்தார். உடனே பேசிய விஜய் சேதுபதி அவரை கலாய்க்க தொடங்கிவிட்டார். டிடிஎப் வாசன் சார் நீங்க என்னை கலாய்க்கிறீங்களா? என கேட்டிருந்தார். உடனே நகைச்சுவையாக விஜய் சேதுபதி பேச தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வைல்ட் கார்ட் என்ட்ரியை வெச்சி செய்த மற்ற போட்டியாளர்கள் – வைரலாகும் ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 34வது நாளில்ன் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 34 நாட்களாகியுள்ள நிலையில், இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் யார் இறுதிக்கட்டத்தை எட்டுவகை என்பது குறித்த எந்த யோசனையும் இல்லை என கூறலாம். அந்த விதத்தில் இந்த சீஸனின் வெற்றியாளர் யாராக இருப்பார் என்ற கணிப்பு கூட இல்லை. மேலும் இந்த வாரத்தில் எந்த எலிமினேஷனும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us