வைல்ட் கார்ட் என்ட்ரியை வெச்சி செய்த மற்ற போட்டியாளர்கள் – வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss Wildcard Entries Face Heat: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கிய சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 5வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், புதிதாக நுழைந்த வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் குறித்து மற்ற போட்டியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் மக்கள் மத்தியில் சிறப்பான ரியாலிட்டி ஷோ மற்றும் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்தி சின்னத்திரையின் மூலமாக இந்த நிகழ்ச்சியானது இந்தியாவில் நுழைந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் ஆரம்பமானது. இதுவரை மொத்தமாக 09 சீசன்கள் நிறைவுபெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த 2026ம் ஆனது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) தமிழ் நிகழ்ச்சியானது ஆரம்பமானது. இதை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுவருகிறது. 5வது வாரத்தின் இறுதி நாளான இன்று (10/10/2026) போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்துள்ளார்.
கடந்த வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் மூவர் நுழைந்த நிலையத்தில், அவர்கள் இந்த வீட்டில் எவ்வாறு இருகிறார்கள் என்பது குறித்து மற்ற போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். டிடிஎப் வாசன், கரீஷ்மா மற்றும் அக்ஷிதா அசோக் போன்ற போட்டியாளர்கள் குறித்து இந்த ப்ரோமோவில் மற்ற போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




இதையும் படிங்க: வேட்டுவம் படத்தில் கேமியோ வேடத்தில் பிரபல நடிகை.. அட இவரா?
வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களை வெச்சி செய்த மற்ற போட்டியாளர்கள்:
இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் குறித்து, மற்ற போட்டியாளர்களிடையே தங்களின் கருத்தை கூறும்படி கேட்டிருந்தார். அப்போது முதலில் பேசிய முனியம்மாள், டிடிஎப் வாசன் தனக்கு குழந்தையாக தெரிவதாக கூறினார். அதன் பிறகு அன்சர், கரீஷ்மாவின் பெயரில் மட்டும்தான் “கரீஷ்மா என்ற பொலிவு இருந்தது, இப்போது ஆட்டத்தில் தெளிவும் இல்லை பொலிவும் இல்லை இருக்கிறது என கூறினார்.
இதையும் படிங்க: இன்று தொடங்கியது தனுஷ் 56 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்!
அதன் பின் தொடர்ந்து பேசிய ஜேசன், கரீஷ்மா வந்த முதல் நாளில் எனக்கு ஒரு எம்டி குப்பைத்தொட்டியை கொடுத்தார், அது இருந்தாலே மீண்டும் நான் அவருக்கு கொடுத்திவிடுவேன் என அதில் அவர் கூறியிருந்தார். மேலும் வினோத் பாபு, “அக்ஷிதா இன்னும் ஈயம் பூசியதுபோலவும் இருக்கிறது ஈயம் பூசத்தவர் போலவும் இருக்கிறது” என வந்த வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் குறித்து மற்ற போட்டியாளர்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்திருந்தனர்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 34வது நாளின் 2வது ப்ரோமோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
#Day34 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/uXinIrwqPZ
— Vijay Television (@vijaytelevision) October 10, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 5வது வாரத்தின் முடிவில் இருக்கும் நிலையில், இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் எலிமினேட் ஆகவுள்ளார் என எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் ஒருபுறம் இந்த வாரத்தில் எந்த எலிமினேஷனும் இருக்காது எனவும் கூறப்பட்டுவருகிறது.