Vettuvam: வேட்டுவம் படத்தில் கேமியோ வேடத்தில் பிரபல நடிகை.. அட இவரா?
Vettuvam Movie Cameo: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாரமான திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இவரின் நடிப்பில் வேட்டுவம் படமானது இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில், இதில் கேமியோ வேடத்தில் நடிகை ஒருவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பா. ரஞ்சித் (Pa. Ranjith). இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) முதல் சியான் விக்ரம் (Chiyaan Vikram) வரை பல்வேறு உச்ச நடிகர்களின் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் வேட்டுவம் (Vettuvam). இப்படமானது கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இன்னும் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறதாம். இதில் ஆர்யா (Arya), அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh) மற்றும் சோபிதா துளிப்பலா (Sobhita Dhulipala) போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் கேமியோ வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது.




இதையும் படிங்க: பாக்கெட் நாவெல் படத்தின் ஷூட்டிங் முடிந்தது… விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு
வேட்டுவம் படத்தில் கேமியோ வேடத்தில் பிரபல நடிகை:
இந்த வேட்டுவம் படத்தில் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு தலைவனாக சண்டையிடும் மற்ற கேங்ஸ்டர்ஸ் மற்றும் அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெகட்டிவ் கட் பண்ணி அனுபிறீங்க.. அது என்ன ஹிமாலயன் ரகசியமா? – ரஜினியிடம் கேள்வி கேட்ட நெல்சன்!
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் கேமியோ வேடத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கிறாராம். அது வேறுயாருமில்லை நடிகை ஸ்ருதிஹாசன்தான். இவர் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
வேட்டுவம் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இணையத்தில் பரவும் பதிவு:
(#Vettuvam Special Cameo – ShrutiHassan 🔒)
#PaRanjith’s Vettuvam is currently undergoing a 3-day patchwork schedule. The team is now shooting scenes featuring #ShrutiHaasan. There is a possibility that her character will serve as the narrator of the film. https://t.co/UQNJZf6Z1M
— Movie Tamil (@_MovieTamil) October 10, 2026
இந்த வேட்டுவம் படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருந்துவருகிறது. இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாத்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.