AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது ஜெயிலர் 2 படக்குழு!

Jailer 2 Movie ticket Booing Open Now | நடிகர் சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படம் வெளியாக இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் தற்போது படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கி உள்ளது.

அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது ஜெயிலர் 2 படக்குழு!
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Oct 2026 13:26 PM IST

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் ஒரு சில படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி தோல்வியையும் சந்தித்தது. மேலும் பல முன்னணி நடிகர்களுக்கு கம்ப் பேக் கொடுக்கும் ஆண்டாகவும் இந்த ஆண்டு உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கிய இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி உள்ள படம் தான் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் முன்பதிவை தொடங்கியது ஜெயிலர் 2 படக்குழு:

மேலும் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவை படக்குழு தொடங்கி உள்ளது. இது தொடர்பான பதிவு ஒன்றை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்பதி தொடங்கியதில் இருந்து பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Also Read… இயக்குநர் எச் வினோத்தின் படத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தால்… இரா. சரவணன் ஓபன் டாக்

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Karthik Subbaraj: ரஜினியை போல உள்ளதாலா? டோரதி படத்தில் ரிஷிகாந்த்தை நடிக்க வைக்க காரணம் இதுதான் – கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்!

Follow Us