AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேனாதிபதி இஸ் பேக்… கமல் ஹாசனின் இந்தியன் 3 குறித்து அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Indian 3 War Mode Movie Update | நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது உருவாக உள்ளது இந்தியன் 3 வார் மோட். இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அப்டேட்டை தெரிவித்துள்ளது தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சேனாதிபதி இஸ் பேக்… கமல் ஹாசனின் இந்தியன் 3 குறித்து அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
இந்தியன் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2026 12:39 PM IST

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் கமல் ஹாசன். அவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் பான் இந்திய மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல் ஹாசன் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் இந்தியன். இந்தப் படத்தின் முதல் பாகம் 1996-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

ஆனால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் வைத்து இருந்த எதிர்பார்ப்பு அதிக அளவில் பூர்த்தியாகவில்லை. மாறாக படம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் இந்தப் படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்களைத் தெரிவித்தனர். இப்படி இருக்கும் நிலையில் இந்தியன் 3 படம் வருமா வராதா என்பதே கேள்விகுறியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசனின் இந்தியன் 3 குறித்து அப்டேட்டை வெளியிட்ட படக்குழு:

தொடர்ந்து படம் தொடங்குமா இல்லையா என்பது கேள்விகுறியாக இருந்த நிலையில் தற்போது இந்தியன் 3 படம் குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 3 படம் தொடங்குவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தப் படம் இந்தியன் படத்தின் ப்ரீகியுவலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… வெறும் கனவு காண்பதோ அல்லது நினைப்பதோ மட்டும் போதாது – புது காருடன் மாஸான போஸ்டை வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா… வைரலாகும் பதிவு

இந்தியன் 3 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரெட்ரோ ஒரு மொக்கை படம்… டோரதி பட வெற்றி விழாவில் மிஷ்கின்பேச்சு

Follow Us