மேஜிக் போஷன் டாஸ்கில் ஒரே டீமில் மோதிக்கொள்ளும் முனியம்மாள் – முத்தழகி.. அடடே என்ன நடக்கு!
Muniyammal and Muthazhagi: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி இன்றுடன் 30வது நாளான நிலையில், இன்று நடைபெற்றுவந்த மேஜிக் போஷன் டாஸ்கில் ஒரே அணியில் இருக்கும் முனியம்மாள் மற்றும் முத்தழகி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழில் பிரபலமான சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் விஜய் டிவி (Vijay Tv). இந்த தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக தொடங்கியிருந்த நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் ஆரம்பமான நிலையில், இன்றுடன் (06/10/2026) தொடங்கி கிட்டத்தட்ட 30 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் இன்று பிக் பாஸில் மேஜிக் போஷன் என்ற டாஸ்க் நடைபெற்றுவந்த நிலையில், அதில் முத்தழகி மற்றும் முனியம்மாள் இருவரும் போறே அணியில் இருந்தனர்.
அந்த விதத்தில் மற்ற அணியிடமிருந்து தங்களின் மேஜிக் பாக்ஸை காப்பாற்றவேண்டும், அந்த விதத்தில் முத்தழகி மற்றும் முனியம்மாள் இருவருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதற்கான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கலேபர டாஸ்க் – வைரலாகும் வீடியோ
பேஜிக் போஷன் டாஸ்கில் ஒரே டீமில் மோதிய முத்தழகி – முனியம்மாள்:
பிக் பாஸ் சீசன் 10 இன்று மேஜிக் போஷன் டாஸ்க் நடைபெற்றுவருகிறது, அந்த வகையில் இந்த டாஸ்குகாக் அணியினர் இரு இரு டீமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் முத்தழகி மற்றும் முனியம்மாள் இருவருமே ஒரே அணியில் இருக்கும் நிலையில், அவர்களிடம் இருந்து கலர் பாக்ஸை லக்ஷ்மி பிரியா முத்தழகியிடம் இருந்து அதை பிடுங்க நினைக்கிறார்.
இதையும் படிங்க: உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடுவானம் போலவே – 19 ஆண்டுகளைக் கடந்தது இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படம்!
அந்த விதத்தில் முனியம்மாள் கொஞ்சம் திமிராக நடந்துகொண்ட நிலையில், முத்தழகி முனியாம்மாளிடம் மோதுவதுபோலவே பேசியுள்ளார். ஒரே அணியில் இருந்தாலும், நாம் இருவருமே தனி தனியாக விளையாடுவோம் என தில் அவரிடம் பேசியுள்ளார். இதனால் முனியம்மாள் பதில் கூறியது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10ல் நிகழ்ச்சியின் 30வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day30 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 6, 2026
தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. கடந்த 5வது வாரத்தின் தொடக்கத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் மொத்தம் 3 பேர் நுழைந்துள்ளார். அதன் காரணமாக ஆட்டம் மேலும் சூடுபிடிக்கிறது.