உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடுவானம் போலவே – 19 ஆண்டுகளைக் கடந்தது இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படம்!
19 Years Of Kattradhu Thamizh Movie | இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகி தற்போதும் ரசிகர்கள் கொண்டாடி வரும் படம் கற்றது தமிழ். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்ததை படக்குழு மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 06-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கற்றது தமிழ். இந்தப் படத்தின் மூலமாகதான் இயக்குநர் ராம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தப் படம் சைக்கலாஜிகள் த்ரில்லர் பாணியில் உலகமயமாக்களையும் அதனால் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் மையமாக வைத்து உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து இருந்தார்.
அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து இருந்தார். இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகை அஞ்சலி தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்த நிலையில் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கற்றது தமிழ் படத்தில் நடிகை அஞ்சலியின் நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
19 ஆண்டுகளைக் கடந்தது இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படம்:
சிறு வயதில் நண்பர்களாக இருந்த ஜீவா மற்றும் அஞ்சலி இடையேயான நட்பு பிற்காலத்தில் காதலாக மாறுகிறது. பெற்றோர்களை இழந்த ஜீவா தனது வாழ்க்கையின் அர்த்தமாக அஞ்சலியைதான் நினைத்து வாழ்க்கிறார். இவர்கள் இருவரும் எதிர்பாராத குடும்ப சூழலால் பிறிந்து இருந்த நிலையில் இறுதியில் எந்த மாதிரியன சூழலில் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 19 ஆண்டுகள் நிறைவு செய்ததைப் படக்குழு மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… Drones: விட்ச் Vs ஏஞ்சல்…. சித்தி இத்னானியின் ட்ரோன்ஸ் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
வெறும் சினிமாவாக அல்லாமல், வாழ்க்கையின் நிஜப் பக்கங்களைப் பேச வைத்த காவிய படைப்பு! 19 ஆண்டுகள் கடந்து என்றும் மனதில் வாழும் “கற்றது தமிழ்”
#19YearsofKattradhuThamizh 💙
#Ram 🛐 #NaMuthukmar @thisisysr https://t.co/ySuaQg5hlY
— Elaa Amuthan (@Ela_Amuthan) October 6, 2026
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 3 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!



