Drones: விட்ச் Vs ஏஞ்சல்…. சித்தி இத்னானியின் ட்ரோன்ஸ் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!
Drones Movie Release Date: தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக இருந்துவருபவர் சித்தி இத்னானி. இவர் தமிழில் நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் நடிப்பில் பேண்டஸி கதைக்களத்தில் வெளியாக காத்திருக்கும் புதிய படம்தான் ட்ரோன்ஸ். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் இயக்குநர் கௌதம் வாசுதேவன் (Gautham Vasudevan Menon) இயக்கத்தில் வெளியான, வெந்து தணிந்தது காடு (VTK) படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தவர் சித்தி இத்னானி (Siddhi Idnani). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்தி நடிகையாக இருந்த நிலையில், இவருக்கு தமிழில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் (Arun Vijay) நாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ட்ரோன்ஸ் (Drones).
இந்த படமானது பேண்டஸி மற்றும் ஹாரர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் மற்றும் 5 ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு பகிர்ந்துள்ளது.
இதையும் படிங்க : 8 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு!
ஜெயிலர் 2 படத்துடன் மோதும் சித்தி இத்தனானியின் ட்ரோன்ஸ் திரைப்படம்:
தமிழில் சித்தி இத்னானி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் நடிப்பில் பேண்டஸி கதைக்களத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ட்ரோன்ஸ். இந்த படத்தில் சித்தி இத்னானி, தேவதர்ஷினி, திராவித் செல்வம் மற்றும் அஞ்சலி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் பேண்டஸி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: யோகி பாபுவின் சிங்காரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
இப்படம் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்புதான் பான் இந்திய படமான ஜெயிலர் 2 படம் வெளியாகிறது. அதனால இந்த படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என தெரியவில்லை. மேலும் இப்படம் வெளியாகும் அக்டோபர் 16ம் தேதியில் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படம் மற்றும் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி போன்ற படங்களும் வெளியாகிறது.
சித்தி இத்னானியின் ட்ரோன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
One Crazy Squad🔥
One Surreal World 💥
Endless Entertainment! 🚁🔥#DRONES 🛸 In Theaters October 16th🎬
@GMMorganFilms @RMirdath @SiddhiIdnani @ianjalinair @DevadarshiniC @Dravid_Selvam @Mohamedkuraish1 @sathishoffl @SassiSelvaraj @imhari_sr_ @jayanthsm @Ruben_trailers https://t.co/S9dBUzxaOQ
— GM Morgan Films (@GMMorganFilms) October 5, 2026
இந்த ட்ரோன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியிற் படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் மற்றும் சென்சார் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



