யோகி பாபுவின் சிங்காரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!
Singgaramm Movie Release Update | தமிழ் சினிமாவியில் இயக்குநர் கே.வி. கதிர்வேலு எழுதி இயக்கி உள்ள படம் சிங்காரம். நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் யோகி பாபு. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து காமெடியனாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். பிற காமெடி நடிகர்கள் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை தவிர்த்து வரும் சூழலில் நடிகர் யோகி பாபு மட்டும் இரண்டையும் விட்டுகொடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் யோகி பாபு நடிப்பில் தமிழ் சினிமாவில் 10 படங்களும் தெலுங்கு மொழியில் ஒரு படமும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் இரண்டு படங்களில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து உள்ளார். மற்றப் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து யோகி பாபு நடிப்பில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




யோகி பாபுவின் சிங்காரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ:
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சிங்காரம். இந்தப் படத்தை கே.வி. கதிர்வேலு எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி உள்ளார். அது மட்டும் இன்றி படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற 30-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… முடிஞ்சா எலிமினேட் பண்ணிக்காட்டுங்க… ஜேசனிடம் சவால் விட்ட கரிஷ்மா – பரபரப்பான புரோமோ!
நடிகர் யோகி பாபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When the world demands surrender…
He chooses courage…and rewrites destiny. ✨Presenting #Singgaramm, a story of an ordinary man
@Raackproduction @iyogiBabu
@KVKathirveluD @SamCSmusic @editorkishore @Viveka_Lyrics
@veghanrajesh @csdivakar
@ramana_balaji @VelaRamamoorthy
@badavagopi @ACTORCHAAMS
@actorsendrayan @km_ganeshkar
@sabbitaroi2 @Njsatz
@RIAZtheboss @ParasRiazAhmed1 @V4umedia_— Yogi Babu (@iYogiBabu) October 5, 2026