Sivakarthikeyan: எந்த சினிமா பின்புலனும் இல்லாமல்.. ரசிகர்கள் மன்ற சந்திப்பில் தீயாக பேசிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Speech: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் சென்னை பரணிப்புத்தூரில் தனது ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை சிவகார்த்திகேயன் ஏற்படுத்தியிருந்தார். அப்போது பேசிய அவர், தனது சினிமா முன்னேற்றம் குறித்து தீவிரமாக பேசியுள்ளார்.
சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டாக இருந்து தற்போது கோலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துபவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரியில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைந்தார்.அந்த திரைப்படம்தான் சேயோன் (Seyon). இப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறைவடைந்த நிலையில், தற்போது பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில் SK27 படத்தில் நடித்துவருகிறார். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுவருகிறது.
சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் மன்றமும் இருக்கிறது. அந்த விதத்தில் இன்று (04/10/2026) சென்னை பரணிப்புத்தூரில் தனியார் மண்டபம் ஒன்றில் தனது ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது, தனது சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: நோ ஸ்கிரிப்ட்.. நோ பேப்பர்.. அரசன் படத்தின் ஷூட்டிங் எக்ஸ்பீரியன்சை பகிர்ந்த யோகலட்சுமி!
தனது ரசிகர்கள் மன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம்:
நடிகர் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “சினிமாவில் எந்தவித பின்புலனும் இல்லாமல் நானும், விஜய் சேதுபதியும் நடிகராக வந்துள்ளோம். மிமிக்கிரி மற்றும் ஆங்கராக இருந்து நடிகராக வரமுடியாதது, என சொன்னவர்கள் மத்தியில் நடிகராக வந்துள்ளோம்” என அவர் தீயாக பேசியிருந்தார். தற்போது இந்த பேச்சானது மக்கள் மத்தியில் பரபரப்பாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: அனைத்திலும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளது டோரதி – பாராட்டி தள்ளிய இயக்குநர் அஜய் ஞானமுத்து
சிவகார்த்திகேயன் பேசியது குறித்து இணையத்தில் வைரலாகிவரும் எக்ஸ் பதிவு:
“Without any cinema background, Vijay Sethupathi and I have both become actors.
I have proved wrong the belief that someone who does mimicry can never become an actor.”
— #SivaKarthikeyan https://t.co/pX535BxRme
— Ayyappan (@Ayyappan_1504) October 4, 2026
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் மற்றும் SK27 என இரு திரைப்படங்களிலும் நாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் உருவாகிவரும் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறதாம். இதில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் திரைப்படத்தை வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயனும் உறுதிசெய்யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.