Yogalakshmi: நோ ஸ்கிரிப்ட்.. நோ பேப்பர்.. அரசன் படத்தின் ஷூட்டிங் எக்ஸ்பீரியன்சை பகிர்ந்த யோகலட்சுமி!
Yogalakshmi About Arasan Movie: தமிழில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி, மக்களிடையே பிரபலமானவர் யோகலட்சுமி. இவர் அரசன் படத்தில் நடிகையாக நடித்துவரும் நிலையில், அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த படங்களுக்கு பிறகு மற்ற நடிகர்களின் படங்களை தயாரிப்பாளராகவும் இவர் தயாரித்துவருகிறார். இந்த வரிசையில் இவர் இயக்குநராக இயக்கிவரும் புதிய திரைப்படம்தான் அரசன் (Arasan). நடிகர் சிலம்பரசன் (Silambarasan) ஹீரோவாக நடிக்க, இயக்குநர் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது.
இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை யோகலட்சுமி (Yogalakshmi) நடித்துவருகிறார். அந்த விதத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், அரசன் திரைப்படத்தில் தான் நடிக்கும் அனுபவம் குறித்து யோகலட்சுமி சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: பிரபல நாயகனுடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் ராஜூ முருகன்? வைரலாகும் தகவல்
வெற்றிமாறனின் அரசன் படத்தில் பணியாற்றுவது குறித்து பகிர்ந்த நடிகை யோகலட்சுமி:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய யோகலட்சுமி, அதில் “ஷூட்டிங் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ஷூட்டிங் மிகவும் நகைச்சுவையாகத்தான் இருந்தது. டயலாக் எல்லாம் பேப்பரில் இருக்காது. எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்றுதான் வசனமே சொல்லுவாங்க. நான் நடித்த வெப் சீரிஸிலும் இதுபோலத்தான் பேப்பர் எல்லாம் கிடையாதது, ஆன் தி ஸ்பாட்டில் வசனத்தை சொல்வார்கள், அதை கேட்டு அப்படியே நடிப்பேன். அதுபோலவேதான் அரசன் பட ஷூட்டிங்கிலும், அப்படித்தான்.
இதையும் படிங்க: ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் காதலா? 8 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதி – த்ரிஷாவின் 96 படம்!
வசனத்தை ஆன் தி ஸ்பாட்டில் சொல்வார்கள் நான் நடிப்பேன். அது எனக்கு மிகவும் சுலபமாக இருந்தது. நடிப்பில் STR-இன் இயல்பான அணுகுமுறை ஒரு வேடிக்கையான, கணிக்க முடியாத அனுபவத்தை உருவாக்கியதாகவும், அதே நேரத்தில் குழுவினரின் ஒருங்கிணைப்பு அந்த செயல்முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றியதாகவும்” கூறியிருந்தார்.
அரசன் படத்தில் சிலம்பரசனுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த யோகலட்சுமி:
🧿🍋🌶️
I’m soooooooo happyyyy that we’re paired up in #arasan @SilambarasanTR_
#Arasan https://t.co/LTxwXq4JQ7
— Yoga Lakshmi (@IamYogaLakshmii) March 23, 2026
அரசன் படத்தை வெற்றிமாறன் இயக்கும் நிலையில், வட சென்னை படத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்திற்கு அனிருத் யோசையமைத்துவரும் நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படம் உள்ளது. இப்படமானது வரும் 2027ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.