
Silambarasan TR
Silambarasan TR
3 வயது இருக்கும் போதே தமிழ் சினிமாவிற்கு சிலம்பரசனை அவரது தந்தை டி.ராஜேந்தர் தத்து கொடுத்ததாக கூறுவார்கள். அப்படி பால்குடி மாறாத வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார் சிம்பு. புலிக்கு பொறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப தந்தைக்கு சற்றுக் குறையாமல் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என அனைத்திலும் தனது பெயரை பதித்துள்ளார் நடிகர் சிம்பு. 1984-ம் ஆண்டு முதல் 2025-ம் வரை தன்னை சினிமாவில் நிலைநிறுத்தியுள்ளார். தனது தந்தையில் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான உறவைக் காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் 2002-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கி தயாரித்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நாயகனாக தமிழி சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார் சிலம்பரசன். இவரை ரசிகர்கள் சிம்பு, எஸ்.டி.ஆர் என செல்லமாக அழைப்பதுக் குறிப்பிடத்தக்கது. சிலம்பரசன் டிஆர் பற்றிய தகவல்களை நாம் காணலாம்.
தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது சுகர் பேபி பாடலின் லிரிக்கள் வீடியோ!
Sugar Baby Song Lyrical Video | இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திலிருந்து சுகர் பேபி பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
- Vinothini Aandisamy
- Updated on: May 21, 2025
- 19:11 pm