Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Silambarasan: எனக்கு அந்த மாதிரியான மனைவிதான் வேணும் – சிலம்பரசன் சொன்ன விஷயம்!

Silambarasan About Future Wife: நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து சினிமாவில் தனது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில், தனது வருங்கால மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Silambarasan: எனக்கு அந்த மாதிரியான மனைவிதான் வேணும் – சிலம்பரசன் சொன்ன விஷயம்!
சிலம்பரசன் Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 04 Feb 2026 08:19 AM IST

தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதலே படங்களில் நடித்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவர் தனது 3 வயதிலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் தந்தை டி.ராஜேந்தர் (T.Rajender), தமிழில் பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் பாடகர் என பல்வேறு பணிகளை செய்துவந்தவர். இவரின் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான “காதல் அழிவதில்லை” (Kadhal Azhivathillai) என்ற படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகனாக சிலம்பரசன் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்கு முன் வரை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகரிகள் மத்தியில் பிரபலமானார். மேலும் சிலம்பரசன் தற்போதுவரையிலும் சினிமாவில் லீட் நாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற படமானது வெளியானது. இதில் கமல்ஹாசனுடன் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்தார். இப்படமானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

இப்படத்தை அடுத்ததாக தொடர்ந்து புது திரைப்படங்களிலும் சிலம்பரசன் நடித்துவருகிறார். அந்த விதத்தில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய சிலம்பரசன் தனது வருங்கால மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே சிலம்பரசன்! லிட்டில் ஸ்டார் முதல் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனான பயணம்!

தனது வருங்கால மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என சிலம்பரசன் பேச்சு:

அந்த நேர்காணலில் வி.டி.வி.கணேஷ், சிலம்பரசனிடம் “உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் ?” என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சிலம்பரசன் ,”எனக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் என்றால், பொதுவாக வீட்டில் காலையில் என்னை எழுப்பி, காஃபி கொடுத்து, எனக்கு சாப்பாடு செய்வது ஒரு அடக்க ஒடுக்கமான குடும்ப பெண் எனக்கு தேவையில்லை. எனென்றால் அந்த மாதிரி எனக்கு உதவி செய்வதற்குத்தானே வீட்டில் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: எனது பியூட்டி சீக்ரெட் இதுதான்.. நடிகை சாய் பல்லவி சொன்ன ரகசியம்!

மேலும் தற்போது நான் இருக்கும் நிலைமைக்கு இணையாக இருக்கும் ஒரு பெண்ணும் தேவையில்லை. நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், என்னது நிலைப்பாட்டையும் தாண்டி, எனக்கும் மேல் ஆதிக்கம் செலுத்தும் பெண் கிடைத்தால்தான், அந்த பெண்ணிற்கு அடங்கி எனக்கு அந்த மாதிரியான மனைவி தான் வேண்டும்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தற்போது இந்த நேர்காணல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

நடிகர் சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் பதிவு:

நடிகர் சிலம்பரசன் தற்போது வெற்றிமாறனின் அரசன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 படத்திலும், அதையடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR50 படத்திலும் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.