Malavika Mohanan: ‘நடிகைகளின் ரசனை’.. நான் அதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் – மாளவிகா மோகனன்!
Malavika Mohanans Style Secrets: தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது உடையின் மீது இருக்கும் கவனம் குறித்தும், ரசிகர்களின் கருத்துக்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். மலையாளம் சினிமாவில் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தனது முதல் படத்திலே துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2013ம் ஆண்டில் வெளியான “பட்டம் போலே” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் நுழைந்தார். இதற்கு முன் நடிகை மாளவிகா மோகனன் மாடலாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இவர் ரஜினிகாந்தின் (Rajinikanth) பேட்ட (Petta) என்ற திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் நுழைந்தார். இவர் தமிழில் முதல் படத்திலே 20 வயது நடிகருக்கு அம்மா வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு இல்லையென்றாலும், தனது இரண்டவது தமிழ் படத்திலே தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) ஜோடியாக, மாஸ்டர் (Master) படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்வது உண்டு. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது உடை மீது உள்ள கவனம் மற்றும் ரசிகர்களின் கருத்து குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: ரன்வீர் சிங் – சாரா அர்ஜுனின் ‘துரந்தர் 2’ டீசர் வெளியானது.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
தனது கவர்ச்சியான உடைகளில் கவனமாக இருப்பது பற்றி மாளவிகா மோகனன் பேச்சு:
இது குறித்து பேசியபோது நடிகை மாளவிகா மோகனன், “நடிகைகளுக்கு மிகவும் தேவையான விஷயம் ரசனையும் மற்றும் ரசிகர்களும்தான். அந்த வகையில் நான் எனது உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பேன். என்னை பார்ப்பவர்களின் கண்களை ஈர்ப்பதே எனது இலக்கு. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆடைகளையும், பார்த்து பார்த்து செலெக்ட் செய்வேன். எனது அழகிற்கும் மற்றும் எனது உடைகளுக்கும் ரசிகர்கள் கொடுக்கும் கருத்துக்களை நான் ரசிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை மாளவிகா மோகனனின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி ராஜா சாப். இப்படத்தின் முலமாக தெலுங்கு சினிமாவில் இவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக நடிகை மாளவிகா மோகனன், தமிழில் சர்தார் 2 என்ற படத்திலும் நடித்திருகிறார்.
இதையும் படிங்க: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் லக்கி படம்.. எப்போது? எதில் பார்க்கலாம்?
இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், மிக முக்கிய வேடத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளாராம். இப்படம் இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.