Malavika Mohanan: நான் ஒரே நேரத்தில் அந்த மூன்று படங்களில் பணியாற்றினேன்..மாளவிகா மோகனன் பேச்சு!
Malavika Mohanan About Hers Simultaneous Films :தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் ஆங்கில பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். அதில் பேசிய இவர், ஒரே நேரத்தில் மூன்றுவிதமாக படங்கள் மற்றும் சினிமாவில் பணியாற்றியது குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) தமிழ், மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் (Master) திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த படத்தை அடுத்தாக தனுஷின் (Dhanush) மாறன் என்ற படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படங்களை அடுத்தாக இவருக்கு தமிழில் பெரியளவு படங்கள் அமையவில்லை. அந்த வகையில் மலையாளம் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். இவருக்கு தெலுங்கில் முதல் திரைப்படமாக அமைந்திருப்பது தி ராஜா சாப் (The Raja Saab) இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன் (Prabhas) இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழில் நடிகர் கார்த்தியுடனும் (Karthi) சர்தார் 2 (Sardar 2) படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணலில் பேசிய மாளவிகா மோகனன், அதில் ஒரே நேரத்தில் பணியாற்றிய படங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: பராசக்தி படத்தில் அந்த பிரபல ஹீரோதான் நடிக்க வேண்டியது… இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்
ஒரே நேரத்தில் நடித்த மூன்று படங்கள் குறித்து மனம் திறந்த மாளவிகா மோகனன் :
அந்த நேர்காணலில் பேசிய நடிகை மாளவிகா மோகனன், “நான் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பணியாற்றினேன். அதில் முதல் படம் ஹிருதயபூர்வம் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 8-9 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றிருந்தது. 2வது, பிரபாஸுடன் தெலுங்கில் தி ராஜா சாப் என்ற காமெடி நிறைந்த திகில் படம்.
இதையும் படிங்க: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா புறப்பட்ட விஜய் – வைரலாகும் வீடியோ
மேலும் தமிழில் கார்த்தி சாருடன் சர்தார் 2 என்ற திரைப்படம். இது உளவு திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 3 இந்த் திரைப்படங்களும் மிகவும் வித்தியாசமான ஜானர் கொண்ட திரைப்படங்கள். இந்த படங்களில் எனது கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானது” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
தான் நடித்த புது படங்கள் குறித்து மனம் திறந்த மாளவிகா மோகனனின் வீடியோ :
Malavika Mohan Recent Interview
– Hridayapoorvam with #Mohanlal began around 8–9 months ago ❤️.
– #TheRajaSaab with #Prabhas is an out-and-out Telugu horror comedy 👻😂.
– #Sardar2 with #Karthi is a spy thriller 🕵️♂️🔥.— Movie Tamil (@_MovieTamil) December 26, 2025
நடிகை மாளவிகா மோகனனின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தன் சர்தார் 2. இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, இவர் இதில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்க, வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.