நடிகர் ராம் சரணும் அவரது மனைவி உபாசனா கொனிடெலாவும் தங்களது இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.