Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு.. இந்திய பேட்டிங்கில் நடந்த முக்கிய விஷயங்கள்!

IND vs PAK T20 World Cup 2026: முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்களும், சிவம் துபே 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தனர். இது டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

India vs Pakistan: பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு.. இந்திய பேட்டிங்கில் நடந்த முக்கிய விஷயங்கள்!
சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 15 Feb 2026 21:12 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இன்று அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் (India vs Pakistan) கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்களும், சிவம் துபே 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தனர். இது டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

ALSO READ: உலகக் கோப்பையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு! இந்த வீரர் இல்லாமல் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

இந்திய பேட்டிங்கில் நடந்த முக்கியமான விஷயங்கள்:

  • நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வயிற்று வலி காரணமாக அபிஷேக் சர்மா விளையாடவில்லை. இதையடுத்து, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கி 4 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார். கடந்த 6 இன்னிங்ஸ்களில் அபிஷேக் சர்மாவின் 4வது டக் இதுவாகும்.
  • அபிஷேக் சர்மா டக் அவுட்டானது மூலம் பல தேவையற்ற பட்டியலில் இடம் பிடித்தார். அதன்படி, ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் வங்கதேசத்தின் இம்ருல் கயஸுடன் சேர்ந்து, முதல் இரண்டு டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸ்களிலும் டக்-அவுட்டாகாமல் ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் அபிஷேக் சர்மா
  • இதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக முறை டக் வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம் பிடித்தார். இந்த பட்டியலில் ஆஷிஷ் நெஹ்ரா 3 முறை டக் அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளார். அபிஷேக், கவுதம் கம்பீர், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் சிவம் துபே போன்றவர்கள் 2 முறை டக் அவுட் ஆகி அடுத்த இடத்தில் உள்ளார்.
  • அபிஷேக் ஆட்டமிழந்த பிறகு, இஷான் கிஷன் – திலக் வர்மாவுடன் இணைந்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு 200 ரன்களை எளிதாக எட்டும் என்று தோன்றியது. இருப்பினும், 9வது ஓவரில் இஷான் ஆட்டமிழந்த பிறகு, இந்திய இன்னிங்ஸ் மெதுவாக நகர்ந்தது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் ரன் மெஷின்.. பாகிஸ்தானுக்கு எதிராக 27 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன்!

  • இந்திய அணி 126 ரன்கள் எடுத்திருந்தபோது திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது, இந்திய அணி 3வது விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக உள்ளே வந்த ஹர்திக் பாண்ட்யா தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
  • தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அப்போது, இந்திய அணி 159 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர், ஷிவம் துபேவும் ரன் அவுட்டானார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் இந்தியா அக்சர் படேலின் விக்கெட்டை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
  • பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சைம் அயூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுமட்டுமின்றி, கேப்டன் சல்மான் ஆகா, உஸ்மான் தாரிக் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.