AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: டி20 உலகக் கோப்பையில் ரன் மெஷின்.. பாகிஸ்தானுக்கு எதிராக 27 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன்!

Ishan Kishan reached Half-Century: 2026 டி20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் வெறும் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

India vs Pakistan: டி20 உலகக் கோப்பையில் ரன் மெஷின்.. பாகிஸ்தானுக்கு எதிராக 27 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன்!
இஷான் கிஷன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 15 Feb 2026 20:00 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் (India vs Pakistan) இடையிலான போட்டி கொழும்பில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்னிங்ஸின் முதல் ஓவரை வீச பாகிஸ்தான் கேப்டன் முடிவு செய்தார். முதல் பந்தை சந்தித்த இஷான் கிஷன் ஒரு சிங்கிள் எடுத்தார். அடுத்த 3 பந்துகளில் அபிஷேக் ரன் எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக, பொறுமை இழந்த இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மிட்-ஆன் நோக்கி காற்றில் எழுந்த பந்தை ஷாஹீன் அப்ரிடியிடம் அடித்து அவுட்டானார். இதனால், முதல் ஓவரில் அபிஷேக் சர்மா விக்கெட் எடுத்தார். இருப்பினும், மற்றொரு முனையை கெட்டியாக பிடித்துகொண்ட இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் வெறும் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, 40 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 77 ரன்கள் எடுத்து சைம் ஆயூப் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தநிலையில், இந்த போட்டியில் இஷான் கிஷன் படைத்த சாதனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இஷான் கிஷன் அதிரடி அரைசதம்:

இஷான் கிஷன் படைத்த சாதனைகள்:

  • பாகிஸ்தானுக்கு எதிரான பவர்பிளேவில் (முதல் 6 ஓவர்கள்) இஷான் கிஷன் தனி ஆளாக 42 ரன்கள் எடுத்திருந்தார். இது இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டிகளில் எந்தவொரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்களாகும். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான டி20யின் பவர்பிளேவில் சுப்மன் கில் 35 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை தற்போது இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.
  • இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டிகளில் வேகமான அரைசதம் என்ற பட்டியலில் இஷான் கிஷன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த சாதனைக்கான சாதனையை முகமது ஹபீஸ் இன்னும் வைத்திருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு அகமதாபாத்தில் ஹஃபீஸ் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக, கடந்த 2025ம் ஆண்டு துபாயில் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். தற்போது இந்த பட்டியலில் இஷான் கிஷன் 3வது இடத்தில் உள்ளார்.

 

Follow Us