T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
T20 World Cup 2026 Points Table: இந்தியா, பாகிஸ்தானை தொடர்ந்து குரூப் ஏவில் அமெரிக்கா அணி தனது வலுவான ஆட்டத்தால் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக, நெதர்லாந்துக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் அமெரிக்கா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, போட்டியின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
டி20 உலகக் கோப்பை 2026ல் (2026 T20 World Cup) இதுவரை 26 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில், யாரும் எதிர்பார்க்காதவகையில் பல சிறிய அணிகள் சிறப்பாக செயல்பட்டு பெரிய அணிகளை தோற்கடித்துள்ளன. இந்தப் போட்டிகளின் முடிவுகள் புள்ளிகள் அட்டவணையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், சூப்பர் 8 சுற்றுக்கான போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா (Australia) உள்பட பல நட்சத்திர அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளன. இதற்கிடையில், சில சிறிய அணிகள் சூப்பர் 8 ஐ நோக்கி முன்னேறி வருகின்றன. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!
குரூப் ஏ புள்ளிகள் அட்டவணை:
இந்தியா, பாகிஸ்தானை தொடர்ந்து குரூப் ஏவில் அமெரிக்கா அணி தனது வலுவான ஆட்டத்தால் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக, நெதர்லாந்துக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் அமெரிக்கா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, போட்டியின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னையில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு நெதர்லாந்து 15.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், அமெரிக்கா நெதர்லாந்தை முந்தி 3வது இடத்தைப் பிடித்தது. இதற்கிடையில், நெதர்லாந்து 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதன்படி, குரூப் ஏ-வில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் 2வது இடத்திலும் உள்ளது.




குரூப் பி புள்ளிகள் அட்டவணை:
குரூப் பி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அதாவது 2026 பிப்ரவரி 13ம் தேதி ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் காரணமாக, ஜிம்பாப்வேயின் வெற்றி புள்ளிகள் பட்டியலில் அதிரடியான மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. குரூப் பி போட்டியில் ஜிம்பாப்வே அணி தற்போது இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். அதெநேரத்தில், இலங்கை அணி 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் இன்னும் புள்ளிகள் எண்ணிக்கையை தொடங்கவில்லை.
குரூப் சி புள்ளிகள் அட்டவணை:
குரூப் சி-யில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. அதேநேரத்தில், ஸ்காட்லாந்து 2 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்தும் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்று, நிகர ரன் ரேட் அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளது. மறுபுறம், நேபாளம் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
ALSO READ: பாகிஸ்தானை முந்திய இந்தியா.. பலம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ்.. புள்ளிகள் பட்டியலில் தற்போதைய நிலை!
குரூப் டி புள்ளிகள் அட்டவணை:
குரூப் டி புள்ளிகள் பட்டியலில் கனடாவை வீழ்த்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, 2 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இருப்பினும், ஆப்கானிஸ்தான் இன்னும் தனது முதல் வெற்றியைத் தேடி நான்காவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், நியூசிலாந்து முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 2 வெற்றிகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.