Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!

Zimbabwe Beat Australia: 170 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது போட்டியில் ஜிம்பாப்வேயின் தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியாகும். இதற்கு முன்பு ஓமன் அணியை (Oman) தோற்கடித்தது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜிம்பாப்வேயின் இரண்டாவது வெற்றியாகும்.

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!
ஜிம்பாப்வே அசத்தல்Image Source: ICC/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 16:03 PM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 19வது போட்டியில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது போட்டியில் ஜிம்பாப்வேயின் தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியாகும். இதற்கு முன்பு ஓமன் அணியை (Oman) தோற்கடித்தது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜிம்பாப்வேயின் இரண்டாவது வெற்றியாகும். இதற்கு முன்பு, 2007 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச ஆஸ்திரேலியா தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரையன் பென்னட் 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு உறுதுணையாக தடிவானாஷே மருமானி 21 பந்துகளில் 35 ரன்களும், ரியான் பர்ல் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தனர். இதுமட்டுமின்றி, ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து 160 ரன்களுக்குள் மேல் எடுக்க உதவினார்.

ALSO READ: நமீபியா எதிராக இஷான் கிஷன் நங்கூர பேட்டிங்.. 209 ரன்கள் குவித்த இந்திய அணி!

146 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி:


170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியான ஜோஷ் இங்கிலிஸ் 8 ரன்களிலும், கேப்டன் டிராவிஸ் ஹெட் 17 ரன்களிலும் வெளியேறினர். அதே நேரத்தில், 3வது மற்றும் 4வது இடத்தில் பேட்டிங் செய்த வந்த கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகினர். அதன்படி, ஆஸ்திரேலிய அணி வெறும் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த சூழ்நிலையில், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் மேட் ரெசன் ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது மேக்ஸ்வெல் 32 பந்துகளில் 31 ரன்களிலும், ரென்ஷா 44 பந்துகளில் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் வெலிங்டன் மார்கஸ் ஸ்டோய்னிஸை 6 ரன்களில் அவுட்டாக்க, ஜிம்பாப்வே டெத் ஓவர்களில் மீண்டு போட்டியை கைப்பற்றியது. இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ALSO READ: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே ஒரு முறை! பாகிஸ்தான் அணியிடம் தோற்ற இந்திய அணி.. எப்போது தெரியுமா?

கலக்கிய முசரபானி:

ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு காரணம் வேகப்பந்து வீச்சாளர்களான பிளெசிங் முசரபானி மற்றும் பிராட் எவன்ஸ் ஆகியோர் ஆவர். பிளெசிங் முசரபானி 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்த 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதற்கிடையில், பிராட் எவன்ஸ் தனது 3.3 ஓவர்களில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், வெலிங்டன் மசகாட்சா மற்றும் ரியான் பர்ல் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. இதில், ஜிம்பாப்வே 2 போட்டிகளிலும் வென்று, சூப்பர் 8 சுற்றை தக்கவைத்துகொண்டது.