AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: அதிக வயதில் அரைசதம்.. டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த ஓமன் வீரர்!

Mohammad Nadeem: 2009 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சனத் ஜெயசூர்யா அரைசதம் அடித்தார். அப்போது அவருக்கு வயது 39 வயது 345. தற்போது, இலங்கை அணிக்கு எதிராக ஓமனை சேர்ந்த முகமது நதீம் 43 வயது 161 நாட்களில் அரைசதம் அடித்தார். மேலும், இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் அதிக வயதுடைய கிரிக்கெட் வீரரும் முகமது நதீம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

T20 World Cup 2026: அதிக வயதில் அரைசதம்.. டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த ஓமன் வீரர்!
முகமது நதீம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Feb 2026 18:15 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இன்று அதாவது 2026 பிப்ரவரி 12ம் தேதி ஓமனும், இலங்கையும் மோதியது. இந்த போட்டியில் ஓமனை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை சாதனை படைத்தது. இருப்பினும், இந்த போட்டியில் மற்றொரு உலக சாதனை முறியடிக்கப்பட்டது. இந்த சாதனையை ஓமன் வீரர் முகமது நதீம் (Mohammad Nadeem) இலங்கைக்கு எதிராக 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இன்னிங்ஸ் விளையாடினார். இதன்மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த அதிக வயதுடைய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு முன்பு அரைசதம் அடித்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையையும் முறியடிக்கப்பட்டது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் 9வது முறை மோதும் IND – PAK.. யார் அதிக முறை வெற்றிபெற்று ஆதிக்கம்?

ஜெயசூர்யாவின் உலக சாதனை முறியடிப்பு:


2009 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சனத் ஜெயசூர்யா அரைசதம் அடித்தார். அப்போது அவருக்கு வயது 39 வயது 345. தற்போது, இலங்கை அணிக்கு எதிராக ஓமனை சேர்ந்த முகமது நதீம் 43 வயது 161 நாட்களில் அரைசதம் அடித்தார். மேலும், இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் அதிக வயதுடைய கிரிக்கெட் வீரரும் முகமது நதீம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், ஷோயப் மாலிக் டி20 உலகக் கோப்பையில் அரைசதம் அடித்தது 39 வயது 279 நாட்கள். கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷன் தனது 39 வயது 155 நாட்களில் அரைசதம் அடித்தார்.

முகமது நதீமின் வாழ்க்கை வரலாறு:

முகமது நதீம் இதுவரை ஓமன் அணிக்காக 70 போட்டிகளில் 20.7 சராசரியுடன் 768 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டி20 சர்வதேச போட்டிகளில் இரண்டு அரை சதங்களை மட்டுமே அடித்திருந்தாலும், 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முகமது நதீம் இலங்கை அணிக்கு எதிராக 56 பந்துகளில் 53 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன்மூலம், இலங்கை அணிக்கு எதிராக ஓமன்  அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 19 வருட டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை 100 ரன்களுக்கு மேல் வெற்றி பெற்றது.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தோல்வி.. சூப்பர் 8க்கு செல்லுமா இங்கிலாந்து..? புள்ளிகள் அட்டவணை இதோ!

டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும் ஓமன்:

ஓமன் அணிக்கு எதிரான பிரமாண்ட வெற்றியின் மூலம், இலங்கை குரூப் பி பிரிவில் முதலிடத்தை எட்டியுள்ளது. மறுபுறம், ஓமன் அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து டி20 உலகக் கோப்பையிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. ஓமனின் அடுத்த போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 14ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அடுத்ததாக 2026 பிப்ரவரி 20ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Follow Us