டி20 உலகக் கோப்பை
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. ஐ.சி.சி ஏற்பாடு செய்யும் டி 20 உலகக் கோப்பை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2026 டி20 உலகக் கோப்பை போட்டி இதன் 10வது பதிப்பாகும். 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா, 2026 டி20 உலகக் கோப்பையின் பிராண்ட் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவும் இலங்கையும் இரண்டாவது முறையாக ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்துகின்றன. 2012 பதிப்பை இலங்கை நடத்தியது. அதே நேரத்தில் இந்தியா 2016 இல் நடத்தியது. 2026ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் போட்டியிடும். அணிகள் தலா 5 அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007ம் ஆண்டு முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. அதனை தொடர்ந்து, 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீண்டும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த நாளில் அணியை அறிவிக்கும் பிசிசிஐ!
Team India Selection for T20 WC 2026: 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அதாவது 2025 டிசம்பர் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ இப்போது இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அணி தேர்வு பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெறும்.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 14:14 pm IST
T20 World Cup 2026: ஒளிபரப்பில் இருந்து விலகுகிறதா ஹாட் ஸ்டார்.. 2026 டி20 உலகக் கோப்பையை எங்கு காணலாம்?
Jio Star Rights ICC: ஐசிசி மற்றும் ஜியோஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இடையேயான ஒளிபரப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை என்றும், இந்தியாவில் ஐசிசியின் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளியாக ஜியோஸ்டார் தொடர்ந்து உள்ளது என்றும் ஐசிசி மற்றும் ஜியோஸ்டார் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 12:39 pm IST
ICC Men’s T20 World Cup 2026: ஆஹா சொல்ல வைத்த ஐசிசி.. ரூ. 100தான்! 2026 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விவரம் வெளியீடு!
ICC Men's T20 World Cup 2026 Tickets: 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறும் இந்தியாவில் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ. 100 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கான ஆரம்பக்கட்ட டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் ரூ. 300 மட்டுமே ஆகும்.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 12:40 pm IST
Indian Cricket Team Jersey: 2026 டி20 உலகக் கோப்பைக்கு புது ப்ளான்.. இந்திய அணிக்கு நியூ ஜெர்சி அறிமுகம்!
Indian New 2026 T20 world Cup Jersey: இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் விழாவில் கலந்து கொள்ளவில்லை. லக்னோவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறது. அதேநேரத்தில், இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லும் கழுத்து வலி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 12:40 pm IST
T20 World Cup 2026 Schedule: வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை அட்டவணை.. முதல் போட்டியில் யார் யார் மோதல்?
ICC Men's T20 WorldCup 2026 Venues: 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி கொல்கத்தாவிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், இறுதிப் போட்டி மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 12:40 pm IST
T20 World Cup 2026: உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது? இன்று வெளியாகும் அட்டவணை!
India vs Pakistan Match Date: 2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 2026 மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 12:40 pm IST
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை நாளை வெளியீடு.. நேரடி ஒளிபரப்பை எங்கு காணலாம்?
ICC T20 World Cup 2026 Schedule: கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 12:40 pm IST
T20 World Cup 2026: 10 ஆண்டுகளுக்கு பிறகு! சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி? உற்சாகத்தில் ரசிகர்கள்!
Chennai Chepauk Stadium: இந்தியாவும் இலங்கையும் இணைந்து வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை நடத்துகின்றன. உலக கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஐ.சி.சி, உலகக் கோப்பையை நடத்த மொத்தம் 8 இடங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக ஐசிசி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Mukesh Kannan
- Updated on: Dec 19, 2025
- 12:40 pm IST