Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தைப்பூசம்

தைப்பூசம்

தைப்பூசம் (Thaipusam) தமிழர்களின் முக்கியமான ஆன்மீக திருநாளாகக் கருதப்படுகிறது. முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு தினங்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் சேர்ந்த நாள் தைப்பூசமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அசுர சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய தெய்வமாக முருகன் விளங்குவதால், அவரை வழிபடுவது வாழ்க்கை தடைகளை வெல்லும் சக்தியை தரும் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் அன்னை பார்வதி, அசுரனை வதம் செய்ய முருகனுக்கு “வேல்” வழங்கியதாக ஐதீகம் கூறுகிறது. ஆகவே, வேல் என்பது அறிவு, தைரியம், தீய எண்ணங்களை வெட்டும் ஞான ஆயுதம் என மதிக்கப்படுகிறது. தமிழகத்தில் பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில் போன்ற முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் கோலாகலமாக நடைபெறுகிறது.

Read More

தைப்பூசம் 2026: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? எப்போது விரதம் தொடங்க வேண்டும்? முழு விவரம்!!

Thaipusam 2026: விரத காலத்தில் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்து, எளிய சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். மதுபானம், புகைப் பிடித்தல், தீய பழக்கங்களைத் தவிர்த்து, சத்தியம், ஒழுக்கம், கருணை போன்ற நல்லொழுக்கங்களைப் பின்பற்றுவது விரதத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.