Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற.. தீப வழிபாட்டின் முக்கியம்சம்..

தீபத்தின் முன், உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை தெளிவாக நினைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, சொந்த வீடு, திருமணம், வேலை, கடன் தீர்வு போன்ற எதுவாக இருந்தாலும், அதை மனதில் உறுதியாக நினைத்து தீபத்தை பார்த்தபடி கீழ்க்கண்ட சக்திவாய்ந்த மந்திரத்தை ஆறு முறை சொல்ல வேண்டும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Jan 2026 14:26 PM IST
தைப்பூசத்தை முன்னிட்டு உங்கள் விருப்பங்கள் நிறைவேற ஒரு சக்திவாய்ந்த  எளிய வழிபாட்டை செய்தாலே, அது எவ்வளவு பெரிய மலை போல பிரச்சினையாக இருந்தாலும், எப்படிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், நிச்சயமாக நிறைவேறும் என்று ஆன்மிக அனுபவங்கள் கூறுகின்றன. முருகப்பெருமானுக்கு உரிய தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, ஆறு நாட்கள் எளிய விரதமும் வழிபாடும் செய்தால், எந்த விருப்பமாக இருந்தாலும் அது நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

1 / 5
இந்த வழிபாட்டின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் விரதம் இருக்க முடிந்தாலும், முடியாவிட்டாலும், இந்த ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். இந்த ஆண்டு தைப்பூசத் திருநாள், பௌர்ணமி திதியும் பூச நக்ஷத்திரமும் இணையும் புனித நாளாக வருகிறது. அதற்கு ஆறாவது நாளாக வரும் தை மாதத்தின் சுப நாளில் இந்த வழிபாட்டை தொடங்குவது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. மேலும், அது முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையாகவும், தை கிருத்திகையுடனும் சேர்ந்து வருவதால், இந்த நாட்கள் மிகுந்த சக்தி கொண்டதாக விளங்குகின்றன.

2 / 5
வழிபாட்டு முறை: இந்த ஆறு நாட்களும், காலையில் நீராடி, குறிப்பாக தலைக்கு குளித்து, சுத்தமான மனநிலையுடன் வழிபாட்டை தொடங்க வேண்டும்.
வீட்டில் முருகப்பெருமானின் படம் அல்லது வேல் முன்பு, சந்தனம், குங்குமம் வைத்து ஒரு தீபத்தை ஏற்றுங்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம் அல்லது வழக்கம்போல் உணவு எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வழிபாடு மட்டும் செய்தாலே போதும்.

வழிபாட்டு முறை: இந்த ஆறு நாட்களும், காலையில் நீராடி, குறிப்பாக தலைக்கு குளித்து, சுத்தமான மனநிலையுடன் வழிபாட்டை தொடங்க வேண்டும். வீட்டில் முருகப்பெருமானின் படம் அல்லது வேல் முன்பு, சந்தனம், குங்குமம் வைத்து ஒரு தீபத்தை ஏற்றுங்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம் அல்லது வழக்கம்போல் உணவு எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வழிபாடு மட்டும் செய்தாலே போதும்.

3 / 5
இந்த வழிபாட்டின் முக்கிய அம்சம் தீபம். அந்த தீபத்தின் முன், உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை தெளிவாக நினைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, சொந்த வீடு, திருமணம், வேலை, தொழில், கடன் தீர்வு போன்ற எதுவாக இருந்தாலும், அதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். பின், அந்த தீபத்தை பார்த்தபடி கீழ்க்கண்ட சக்திவாய்ந்த மந்திரத்தை ஆறு முறை சொல்ல வேண்டும். “உருவாய் அருவாய், உளதாய் இலதாய், மருவாய் மலராய், மணியாய் ஒளியாய், கருவாய் உயிராய், கதியாய் விதியாய், குருவாய் வருவாய், அல்வாய் குகனே”

4 / 5
இந்த மந்திரம் மிகுந்த சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. ஆறு முறை சொல்லும் போது, பல அற்புத மாற்றங்கள் வாழ்க்கையில் நடக்கத் தொடங்கும் என்று ஆன்மிக நம்பிக்கை கூறுகிறது. நம்பிக்கையோடு, மனம் ஒருமித்து, இந்த ஆறு நாட்கள் வழிபாட்டை செய்தால், முருகப்பெருமானின் அருளால் உங்கள் வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேறும்.

5 / 5